எ - து : அழகியநுதலினையும், அழகுபெறுத்துகின்ற குழலினையும், அழகிய மூங்கில்போலும் பெருமையினையுடைய மெல்லிய தோளினையுமுடைய பூமணம் நாறுங்கதுப்பினையுடையாய்! மூங்கில் ஒலிக்கின்ற முழைஞ்சையுடைய மலையை முன்புபோலன்றி நீ இயற்பட ஒன்று பாடு, பின்னர் யானும் இயற்பட ஒன்று பாடுவேனெனத தோழி 1கூறினாள்; எ - று. பாடித்தை, முன்னிலைவினைத்திரிசொல்; ஏத்துகு, தனித்தன்மை முற்று. தலைவி இயற்படப் பாடாமையின், மேல் தோழி பாடுகின்றாள். 11 | கொடிச்சியர்கூப்பி வரைதொழு கைபோ (1) லெடுத்த நறவின் 2குலையலங் காந்தட் டொடுத்ததேன் சோரத் தயங்கந்தன் னுற்றா ரிடுக்கண் டவிர்ப்பான் மலை |
எ - து : தன்னைச்சேர்ந்தாருடைய வருத்தத்தைப்போக்குவானுடையமலை, கையிரண்டையுங் குவித்துக் கொடிச்சியர் தங்குறைத்தீர முருகன் உறையும் மலையைத் தொழுகின்ற கைகள்போல, உயர்ந்த நறவினையுடைய கொத்துக்கள் அசையுங்காந்தளிடத்து வைத்த தேன் ஒழுகுபாடியாக, அக்காந்தள் அசை யாநிற்கும் ; எ - று. மலை காந்தள் அசையுமென இடத்துநிகழ்பொருளின்றொழில் இடத்திற்கு ஏறிநின்றது. இதனால், தெய்வத்தைத் தொழுங் கருத்தில்லாத காந்தளும் தெய்வத் தைத்தொழுவதுபோல நில்லாநின்றது. நீயும்வரைந்து கோடற்குக் குலதெய்வ மாகிய முருகனைத் தொழுவாயாகவென இயற்படமொழிந்தாள். காந்தளிற்றேன் பயன்படாமற் சொரிகின்றாற்போல நீயும் தெய்வத்தைத் தொழாவிடின் நின்ன லனும் பயன்படாமற் கழியுமென இஃது உள்ளுறையுவமமாயிற்று.
யித்தை நினைத்தொடர் கொலையை யென்றனர்'' திருவானைக்காப். நீலவிண்டு. 15. 1. (அ) சாரியைகளைக்கூறுஞ் சூத்திரத்து, 'பிறவும்' என்பதனால் மற்றும் சில சாரியைகளைக் கொண்டபின், ''எடுத்த நறவின் குலையலங் காந்த ளென்புழி அலமென்பதோர்சாரியையும் உண்டாலெனின், அதனை அலங்கு காந்தளென்பதன் விகாரமென்ப'' என இளம்பூரணரும் ''வினைத்தொகை; சாரியை அன்று'' என நச்சினார்க்கினியரும் (தொல். புண. சூ. 17.) கூறுதலால் இதுவே பழம்பாடமென்பது புலனாகின்றது. (ஆ) ''அகலிலைக் காந்த ளலங்குலைப் பாய்ந்து பறவை யிழைத்த பல்கணிறா அற், றேனுடை நெடுவரை'' நற். 185 : 8 - 10. (இ) ''அலங்கு குலைக் காந்தள்'' நற். 359 : 2. குறுந். 239. (ஈ) ''பூந்தண்சாரற் பொருங்குகுலை யெடுத்த, காந்தட்கொழுமுகை'' பெருங். (உ) 12 : 67 - 8. (பிரதிபேதம்) 1 கூறத் தலைவி..............................பாடுகின்றாள். பாடித்தை, 2 குலையலங்காந்தன்.
|