பக்கம் எண் :

234கலித்தொகை

(1) பூத்தாழ்ந்ததளிரெனவே சுணங்கும் மாமைநிறமுங் கூறிற்றாம்.

22 விண்டோய் வரைப் (2) பந் தெறிந்த 1வயாவிடத்
தண்டா (3) ழருவி யரமகளி ராடுபவே
(4) பெண்டிர் நலம்வௌவித் தண்சாரற் றாதுண்ணும்
வண்டிற் றுறப்பான்மலை

1. ''மாவீன்ற தளிர்மிசை மாயவ டிதலைபோ, லாயிதழ்ப் பன்மலரைய கொங்குறைத்தர'' (கலி. 29 : 7 - 8.) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

2. (அ) பசப்புறு பருவர லென்னும் குறள். 119 - ஆம் அதிகாரத்தின் அவதாரிகையில் ''அது பசப்புற்ற பருவரலென விரியும்; அஃதாவது பசப்புறுதலானாய வருத்தம்; இதனை, 'பந்தெறிந்தவயா' என்பதுபோலக் கொள்க'' என இத்தொடரை மேற்கோள்காட்டுவர் பரிமேலழகர். (ஆ) ''வளங்கெழு திருநகர்ப் பந்துசிறி தெறியினும்,.....................உயங்கின் றன்னையென் மெய்யென் றசைஇ, மயங்குவியர்பொறித்த நுதலள்'' அகம். 17 : 1 - 4.

3. (அ) ''அருவி நுகரும் வானர மகளிர்'' மலை. 294. (ஆ) ''அமர நாடியர் துன்னியா டிடங்களும்'' கம்ப. பிலநீங்கு. 8.

4. (அ) ''பெண்டிர் நலம்.............மலை'' என்பதனை, புலன்பொருளாகப் பிறந்த உவகை யென்னு மெய்ப்பாட்டிற்கு, மேற்கோள்காட்டி, 'இஃது அறிவுபொருளாக உவகைபிறந்தது என்னை?முகைப்பதம் பார்க்கும் வண்டுபோலத் தலைவியரை நகைப்பதம் பார்க்கும் அறிவுடைமை காமத்திற் கேதுவாதலின்' என்பர் பே; (ஆ) இ - வி. நூலாரும். இவ்வாறே கூறுவர். (இ) ''தாதுண் வேட்கையிற் போதுதெரிந் தூதா, வண்டோ ரன்னவவன் றண்டாக் காட்சி'' (ஈ) ''நீயே பெருநல நகையே யவனே,நெடுநீர்ப் பொய்கை நடுநா ளெய்தித்,
தண்கமழ் புதுமலரூதும், வண்டென மொழிப மகனென்னாரே'' (உ) ''மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல், வண்டின் மாண்குண மகிழ்நன் கொண்டான் கொல்''(ஊ) ''புதுவ மலர்தேரும் வண்டேபோல் யாழ, வதுவை விழவணி.............................வந்தமை கைப்படுத்தேன்'' (எ) ''வேனிற் பருவத் தெதிர்மல ரேற்றூதூங்,
கூனிவண் டன்னன் குளிர்வய னல் லூரன், மாணிழை நல்லா ரிளநல முண்டவர்,மேனியொழிய விடும்''.
(ஏ) ''வண்டோரனையர் ஆடவர் பூவோரனையர் மகளிரென்பது ; என்னை? வண்டுகள் தாதூமிடத்து நன்மலரே ஊதுவேம் அல்லாதது ஊதே மென்னா, எல்லாமலரும் ஊதும். இனி, பூவாயின 'சால எம்மையே ஊதாது எல்லாப்பூவையும் ஊதினீர்' என்று புலவாவன்றே, அது போலத் தலைமகனும் எல்லாப் பெண்பால்களையும் தலைப்பெய்தற்

(பிரதிபேதம்) 1 வியர்.