பக்கம் எண் :

242கலித்தொகை

(1)னிறவரை 1வேங்கையி னொள்வீ சிதறி
(2)யாசினி மென்பழ 2மளிந்தவை யுதிராத்
தேன்செ யிறாஅ றுளைபடப் போகி
(3)நறுவடி மாவின் பைந்துண ருழக்கிக்
15குலையுடைவாழைக் கொழுமடல் கிழியாப்
பலவின் 3பழத்துட்டங்கு மலைகெழு வெற்பனைப்
பாடுகம் வாவாழி தோழிநற் றோழிபாடுற்று

எ - து: நற்றோழீ ! இடுபடுதலுற்று நெருப்பையுமிழ்ந்து ஒலிக்கும் எங்குங்கலந்த பெயலாலே இருண்ட நடுநாளிலே ஒழுங்குவிட்டு மின்னுண்டாக்கின ஒளியிலே பிடியுடனே வந்து புன்செய்யிலே மேயும் யானைகளினுடைய அடிகள் நடக்கின்ற நடையின் ஓசையைக் கேட்ட கானவன் உயர்ந்த மலையில் ஆசினிப்பலாவின்மேல் இட்ட பரணிலே ஏறிக் கடிய விசையினை யுடைய (4) கவணையிற் கல்லை எறிகையினாலே அக்கல்லு முறிந்தவரையிடத்து நின்ற வேங்கையினது ஒள்ளிய பூக்களைச் சிதறி, ஆசினிப்பலாவினது மெத்தென்ற பழம் ஞெகிழ்ந்தவற்றை உதிர்த்து, தேனினம் வைத்த இறாலைத்


தேமாங் கனி சிதறி வாழைப் பழங்கள்சிந்து, மேமாங் கதமென் றிசை யாற்றிசை போய துண்டே" சீவக. 31.
(ஊ) "தாழை முப் புடைக்காய் வீழ்ந்து தாற்றிளங் கமுகு செற்று, வீழ்சுளை வருக்கை போழ்ந்து வெம்புலி யடிய பைங்காய்க், கோழரை யரம்பை சாய்க்குங் குடக நாடு” நைடதம். சுயம்வர. 159. (எ) "ஓங்கிருந் தாழை நெற்றி யொண்பழன் வருக்கை போழ்ந்து, தீங்கரும் பெருத்திற் றாழ்ந்த தேத்திறால் சிதைய வீழும், வீங்குநீர் மருத வேலி மிதிலை" பாகவதம். (10) சததன்னுவாவைக் கொன்ற. 20. (ஏ) "பாளைவாய்க் கமுகி னெற்றிப் படுபழ முதிர விண்டு, நீள்கழைக் கரும்பி னெற்றி நெய்ம்முதிர் தொடையல் கீறி" சீவக. 1198. என அவற்றுக்குத்தகப் புனைந்துரைத் திருப்பவை இங்கே ஒப்புநோக்கற்பாலன.

1. "இறுவரை புரையுமா றிருகரை யேமத்து" (பரி. 7: 40.) என்புழி இறுவரை யென்பதற் கெழுதப்பெற்றுள்ளவுரையும் "இறுவரை வீழ" பு - வெ. தும்பை. 20-என்னு மூலமும் நோக்குக.

2. "குருவி யோப்புதங் கவண்கலாற் குலைந்திறா லினத்தோ, டுருவ வாசினி யுக்கன" தணிகை. நாட்டு. 44.

3. "நறுவடி மாஅத்து" நற். 243; ஐங்குறு. 61,213; 'மாவி, னறுவடி' கலி. 84: 1 - 2.

4. கவணென்பது கவணையென ஐகாரச்சாரியை பெற்றுவந்தது; இஃது இக்காலத்து, கவண்டைஎன வழங்குகின்றது.

(பிரதிபேதம்) 1 வேங்கை யொள்வீ, 2 அழிந்தவை, 3 பழத்திற்றங்கு.