எ - து: நற்றோழீ ! நீ வாழ்வாயாக ; தோழீ! தான் சூளுற்ற சூளுற வினைப் பாதுகாவானாய்ப் (1) பொய்த்தவனுடைய மலையாயிருந்தும் வீழ்தலுற்று விளங்கும் அருவியையுடைத்து, விளங்கும் அருவியையுடைத்து, மழைபெய்தலால் விளங்கும் அருவியையுடைத்து;எ - று. இஃது என்னவியப்போவெனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றிற்று, இஃது "இறைச்சி தானே பொருட்புறத் ததுவே" (2) என்பதனாற் கொள்க, இருகால் அருவித்தென்றது அருவிப்பன்மை 1 நோக்கி்ற்று. இது மெய்யைப் பொய்யாகக்கோடலிற் (3) பொய்யாக்கோடலென்னும் மெய்ப்பாடு. அவைதாம் மழைபெய்து வந்த அருவியென்று அதனைப் பின்னர் 2 விசேடித்தாள். அதுகேட்ட தோழி. 21 | (4)பொய்த்தற் குரியனோ பொய்த்தற் குரியனோ (5)வஞசலோம் பென்றாரைப் பொய்த்தற் குரியனோ |
1. "விண்பொயத னான்மழை விழாதொழியி னும"் தேவாரம், 2. "இறைச்சிதானே பொருட்புறத்ததுவே" என்புழி ‘இலங்கும்,,,,,மலை’ என்பதை மேற்கோள்காட்டி, "சூளைப்பொய்த்தானென்பதே கூறவேண்டும்பொருள்; அதன் புறத்தே, இங்ஙனம்பொய்த்தான் மலை யகத்து நீர் திகழ்வான் (?) என இறைச்சிப்பொருள் தோன்றியவாறு காண்க" என்பர், நச்; தொல். பொருளியல். சூ. 35. இ - வி, சூ. 588. உரையிலும் இவ்வாறே உள்ளது. 3. இம்மெய்ப்பாட்டிற்கே, "வானினிலங்கு.........மலை" என்பதனை மேற்கோள் காட்டினர், பேராசிரியரும்; தொல். மெய்ப். சூ. 22. 4. (அ) "நும்மோரன்னோர்மாட்டுமின்ன, பொய்யொடு மிடைந்தவைதோன் றின் மெய்யாண் டுளதோவிவ் வுலகத் தானே" அகம். 286: 15 - 7. (ஆ) "மருளிற் பிணைந்து பொய்ச் சூளுறு வார்கொல்வை வேலரன்னா, யிருளிற் பிணைந்த விருவினை மாற்றியெல் லாங்கழிப்பி, யருளிற் பிணைந்தவ ராங்கிரு ளோடு மணைந்ததொப்பாம்,பொருளிற்பிணைந்ததம் வாய்மையிற் பொய்ம்மை புகுந்திடினே" தணிகை. களவு. 478. 5. (அ) "அஞ்சலோம் பென்னு, நன்னர் மொழியு நீமொழிந் தனையே" கலி. 21: 7 - 8. (ஆ) "அஞ்லோம் பென்றதன் பயனன்றோ." கலி. 132: 9.(இ) "அஞ்சலோம் பென்றார்" குறள். 1149. (ஈ) "அஞ்சலோம் பென்று நலனுண்டு நல்காதான்" சிலப் (24)(உ) "அஞ்சலோம்பென் றளித்த, வஞ்ச மற்றவர் வாரார்" தொல். செய். சூ. 155, பே. மேற்கோள். (பிரதிபேதம்) 1 நோக்கி, 2 விசேடித்தாள் பொய்த்தற்கு.
|