16 | தண்ணறுங்(1) கோங்க மலர்ந்த வரையெல்லாம் பொன்னணி யானைபோற் றோன்றுமே நம்மருளாக் (2)கொன்னாள னாட்டு மலை |
எ - து: நம்மை அருளி இல்லறப்பயனை ஆளாமற் பயனின்மையை ஆளுகின்றவன் நாட்டு மலையாயிருந்தும் தண்ணியநறிய 1கோங்கம் பூத்த பக்க மலையெல்லாம் பொன்னாற் செய்த பல ஆரமணிந்த யானைகள் போலச் சிறந்து தோன்றும்; இதற்குக் காரணமென்னெனத் தோழி இயற்பழித்தாள். எ - று. அருளாவென்பது, செய்யாவென்னு மெச்சம். 19 | கூருநோ யேய்ப்ப விடுவானோ தன்மலை (3) நீரினுஞ் சாய லுடைய னயந்தோர்க்குத் (4)தேரீயும் வண்கை யவன் |
எ - து; தன்கொடையை விரும்பி வந்தோர்க்குத் தேரைக் கொடுக்கும் வளவிய கையையுடையவன் நம்மாட்டுத் தன்மலையின் நிரினும் 2மென்மையை யுடையவனாதலால் வரையாமல் நமக்கு மிகுகின்ற நோய் நம்மைப் பொருந்தவிடுவனோ? 3விடான்; வரைவனெனத் தலைவி இயற்படமொழிந்தாள்; எ - று. 22 | (5) வரைமிசை மேற்றொடுத்த நெய்க்க ணிறாஅன் மழைநுழை திங்கள்போற் றோன்று மிழைநெகிழ வெவ்வ முறீஇயினான் குன்று. |
1. "மந்தர மென்னு மத்த யானை,நீல நெடுவரை நெற்றித் தாகிய,கோலக் கோங்கின் கொழுமலர் கடுப்புறு, சூறைக் கடுவளி பாறப் பறந்தெனப்,பட்ட மடுத்த கொட்டையொடு பாறவும்" பெருங் (3) 27 : 71 - 5. 2. "அச்சம் பயமிலி காலம் பெருமையென்,றப்பா னான்கே கொன்னைச் சொல்லே" தொல், இடை. சூ. 6. 3. (அ) "புதுநிறை வந்த புனலஞ் சாயல்.............நன்னற்படர்ந்த கொள்கையொடு" மலை. 61 - 4. (ஆ) "வானிநீரினுந் தீந்தண்சாயலன்" பதிற். 86 : 12 - 3; (இ) "மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரு, நீரினு மினிய சாயற், பாரி" புறம். 105 : 6 - 8. 4. (அ) "தேர்வீசு கவிகை, யோம்பா வள்ளல்" மலை. 399 - 400. (ஆ) "தேர்வீ சிருக்கை" (இ) "தேர்வீ சிருக்கை நெடியோன்" புறம். 69 : 18, 114 : 6. 5. (அ) "ஏன லிதணத் தகிற்புகையுண்டியங்கும், வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத், தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங்,கானக நாடன் மகன்" கலி. 39 : 7 - 10. (ஆ) "பாய்தலிற் கிழிந்து, (பிரதிபேதம்) 1 கோங்கு, 2 மென்மையுடையன், 3 விடானெனத்.
|