மூங்கில் மிசைந்தபடி தம்மிடத்துத்தாழ்ந்த அரியதலைவனை அன்புடனே பெற்று நுகர்ந்த தலைவியாகவும், பின்னர் அது வாழைச்செறிவிலே புகுந்து அப்பழத்தை நுகர்ந்ததன்மை அவன் வரைந்து கொண்டுழி அவன் மனைக்கண் நலிவற இருந்து அவனை நுகர்ந்ததாகவும், புலிமுதலியனவின்றி மறியூரிடத்துத் துயிலுதல் அலர்கூறுவாரின்றி அவன் சுற்றத்திடை இல்லறம் நிகழ்த்தித் தங்குந் தன்மையாகவும் உள்ளுறையுவமங் கொள்க. இது 1வினையுவமப்போலி. (6). | (1)அரவின் பொறியு (2)மணங்கும் புணர்ந்த வுரவுநின் 2மேலசைத்த கையை யொராங்கு நிரைவளை முன்கையென் 3றோழியை நோக்கிப் (3) 4படிகிளி பாயும் (4) 5பசுங்குர லேனல் |
1. (அ) "புணர்ந்தபி னவன்வயின் வணங்கற் கண்ணும்" எனப்தற்கு, ‘மேற்சொல்லப்பட்ட மூவகையாலும் புணர்ச்சியுண்மை பொருந்திய பின் தலைவன்கட் டாழநிற்றற் கண்ணும்’ என்று பொருள்கூறி, "அது நீ கருதியதுமுடிக்கற்பாலை யெனவும் நீ இவளைப் பாதுகாத்தல் வேண்டுமெனவும் இவ்வகை கூறுதல்" என்று விளக்கி, "அரவின் பொறியும்...............................ஓம்புதல் வேண்டுமெனவும், கடுமா கடவுறூஉங்..............................கவினே யெனவும் வரும்" என்பர் இளம். (ஆ) நச்சினார்க்கினியரும் இதனையே தழுவுவர். தொல். கள. சூ. 23. (இ) "அரவுற ழஞ்சிலை" குறிஞ்சி. 158. (ஈ) "யரவின்றோற்றமே போலும் சிலைகளும்" சீவக. 2158. என வில்லுக்கு அரவு உவமமாய் வருதலும் காண்க. 2. (அ) "அழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேல்" (ஆ) "உரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவேல்" சிறுபாண். 94, 102; என்பவற்றினுரையாலும், (இ) "வென்றிமங்கை வேடர்வில்லின் மீதுமேவு பாதம்" பெரிய. கண்ணப்ப. 69 என்பதனாலும், படைக்கலங்களில் கொற்றவை வுறைவதாகக் கூறுதல் மரபென்று அறியப்படுதலின் இங்கும் ‘அணங்கு’ என்பதற்குக் கொற்றவை என்று பொருள் கொள்ளலுமாம். 3. "படிகிளி............................வேண்டும்" என்பது குற்றியலுகரம் ஒற்றொடுவந்து நேரசையானதற்கு மேற். தொல். செய். சூ. 9. ‘குற்றியல்’ இளம். 4. ஏனல் பசுந்தினையாதலின்: "பசுங்குரலேனல்" என்றார். இதனை (அ) "அமைந்த, திவட்காயிற் செந்தினைகா ரேனல்" (திணைமாலை. 8.) என்பதும் (ஆ) ஏனலென்பதற்குப் பசுந்தினையென்று (ஐந் - ஐம். 12.) உரை யெழுதப்பெற்றிருப்பதும் வலியுறுத்தும். (பிரதிபேதம்)1 உவமப்போலி அரவின், 2 மேலசைஇய, 3 தோழி நெறிநோக்கி, 4படுகிளி, 5. பைங்குரல்.
|