பக்கம் எண் :

306கலித்தொகை

யுடைய புனத்திற் கிளியைக் கடிதலை ஒருபடிப்பட மறப்பித்து, நின்வயத்தாளாக்கியே விட்டாயாயின், இனி நீ 1இடையிடாது நினைத்தலைப் பாதுகாத்தலை இவள் விரும்பும்; இவள் பல குலைகளையுடைய 2பலாவினது பிசினையுடைத் தாகிய இடத்தையுடைய இனிய பழம் வீழ்ந்துகிடந்த பாறையிடத்தே எடுத்துக்கொண்டு உண்ணும் ஊணினையும் பெருஞ்சோற்றுத் திரளையுமுடைய சிறிய குடிவிலிருக்கும் பிள்ளையான் மிடிப்பட்டாருடைய செல்வத்தையுடைய மகள்; ஆதலான் நின்னைப் பிரிந்து வருந்துதலாற்றாள்; எ-று.


(ஆ) "தேம்படு சாரற் சிறுதினைப் பெருங்குரல், செவ்வாய்ப் பைங்கிளி கவர நீமற், றெவ்வாய்ச் சென்றனை யவணெனக் கூறி, யன்னை யானாள் கழற", (இ) "துய்த்தலைப் புனிற்றுக்குரல் பால்வார் பிறைஞ்சித், தோடலைக்கொண்டன வேன லென்று, துறுகன் மீமிசைக் குறுவன குழீஇச், செவ்வாய்ப் பாசினங் கவருமின் றவ்வாய்த், தட்டையும் புடைத்தனை கவணையுந் தொடுக்கென, வெந்தைவந் துரைத்தன னாக". (ஈ) "வாரன் மென்றினைப் புலவுக்குரன் மாந்திச், சாரல் வரைய கிளையுடன் குழீஇ, வளியெறி வயிரிற் கிளிவிளி பயிற்று, நளியிருஞ் சிலம்பி னன்மலை நாடன்", (உ) "தந்தை வித்திய மென்றினை பைபயச், சிறுகிளி கடிதல் பிறக்கியா வணதோ, குளிர்படு கையள் கொடிச்சி செல்கென", (ஊ) "பைந்தினை, பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும்", (எ) "பைந்தாட் செந்தினை, வரையோன் வண்மை போலப் பலவுடன், கிளையோ டுண்ணும் வளைவாய்ப் பாசினம்", நற். 147 : 2 - 5. 206 : 1 - 6, 304 : 1 - 4, 306 : 1 - 3. 317 : 3 - 4, 376 : 2 - 4. (ஏ) "பொன்போற் சிறுதினைக், கிளிகுறைத் துண்ட கூழை யிருவி", (ஐ) "செந்தினை...........................பைங்குரற், படுகிளி கடிகஞ் சேறும்", (ஒ) "ஏனற், படுகிளி கடியுங் கொடிச்சி"
(ஓ) "பெருங்குர லேன, லுண்கிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே" குறுந். 133, 198, 291, 360. (ஒள) "சாரற் புறத்த பெருங்குரற் சிறுதினைப், பேரமர் மழைக்கட் கொடிச்சி கடியவுஞ், சோலைச் சிறுகிளி யுண்ணுநாட" (ஃ) "வன்கட் கானவன் மென்சொன் மடமகள், புன்புல மயக்கத் துழுத வேனற், பைம்புறச் சிறுகிளி கடியு நாட" (அஅ) "தினையாய் கிள்ளை" (ஆஆ) "மெல்லியற் கொடிச்சி காப்பப், பல்குர லேனற் பாத்தருங் கிளியே" (இஇ) "கொடிச்சி யின்குரல் கிளிசெத் தடுக்கத்துப், பைங்குர லேனற் படர்தருங் கிளியெனக், காவலுங் கடியுநர் போல்வர்" ஐங்குறு. 282, 283, 287, 288, 289. (ஈஈ) "சிறுதினைப் படுகிளி கடீஇயர், பன்மாண், குளிர்கொ டட்டை மதனில புடையா" (உஉ) "தழலை வாங்கியுந் தட்டை யோப்பியு, ........................குறமகள், காக்கு மேனல்" (ஊஊ) "பெருங்குர லேனல், கிளிபட விளைந்தமை யறிந்துஞ் செல்கென,

(பிரதிபேதம்)1இடையிட்டு, 2 பலாவின் பசினை.