| குறங்கறுத் திடுவான்போற் கூர்நுதி மடுத்தத | (1) | னிறஞ்சாடி முரண்டீர்ந்த நீண்மருப் பெழில்யானை | (2) | மல்லரை மறஞ்சாய்த்த மால்போற்றன் (3) கிளைநாப்பட் |
கல்லுயர் (4)நனஞ்சாரற் கலந்தியலு நாடகேள் யோன்மொழி, மோன வண்குறி தானுண ராவெதிர் மோதினன்கதை" (இ) "ஊறு மிஞ்சிய பேருட லோடெதி ரோடி வன்றொடை கீறிட மாறடும், வீறு கொண்டக தாயுதம் வீசினன் வீர னம்புவி மீதுற வீழவே" (ஈ) "அரிப்ப தாகனு ரகப்ப தாகனை யதிர்த்து மேலுற வடர்த்துநீ, டுருப்பி னோடதி சயிக்க வூருவை யொடிக்கவே" (உ) "உடல், கம்பி யாவிழ வூருவின் மோதுதல் கண்ட போதென தாருயிர் போனதே" (வில்லி. பதினெட்டாம், 182 : 184, 185 : 186, 191.) என்பவற்றால் வீமசேனன் கதைகொண்டு துரியோதனன் றொடையை மோதி யொடித்தா னென்பதே அறியப்படுகின்றது. அப்பொருளை நோக்க, குறங்கிறுத்தலென்று இருக்கலாமெனினும் ஏடுகளில், குறங்கறுத்த லென்றே காணப்படுதலாலும் (ஊ) "மறங்கெழுவேந்தன் குறங் கறுத் திட்டபின்" (பாரதம்,) (எ) "குருகுல வேந்தனைக் குறங்கறுத்த ஞான்று" (தொல். புறத். சூ. 17. நச். உரை.) என இச்செய்தி கூறுமிடத்தும் (ஏ) "காடுதேர் மடப்பிணை யலறக் கலையி, னோடுகுறங் கறுத்த செந்நா யேற்றை" (அகம். 285 : 5 - 6.) என்னுமிடத்தும் பிறவிடத்தும் குறங்கறுத்த லென்றே ஒரு தொடர் காணப்படுதலாலும் இறுத்தலென்ற பொருளில் அறுத்தலென்றே ஒரு சொல் பண்டு வழங்கி யிருக்குமென்று கருதி, குறங்கறுத்த லென்றே பதிப்பிக்கலாயிற்று. 1. (அ) "நிறம் - மருமத்தான மெனப்படும் உயிர்நிலை: "வெள்ளமா னிறனோக்கிக் கணைதொடுக்குங் கொடியான்" கலி. 120 : 11. (ஆ) "கோறெரிந்து, வரிநுதல் யானை யருநிறத் தழுத்தி"அகம். 172 : 7-8. (இ) "செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறநீது, கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலின்" தொல். செய். சூ. 95. பே. மேற்கோள். 2. (அ) பெருமித வுவமத்திற்கு "மல்லரை........................நாடகேள்" என்பது மேற்கோள்; தொல். உவம. சூ. 19. பேர். (ஆ) "மல்லரை மறஞ்சாய்த்த மலர்த்தண்டா ரகலத்தோன்" கலி. 134 : 1. (இ) "மல்லர்க் கடந்தானிறம்போன் றிருண்டு" ஐந்திணையைம்பது. 1. 3. (அ) "கிளைபா ராட்டுங் கடுநடை வயக்களிறு" அகம். 218; 1. (ஆ) "கொல்களிறு.................கிளைபுகலத் தலைக்கூடியாங்கு" புறம். 17 : 17 - 9. 4. "நனஞ்சாரல்" கலி. 44. 1; 45. 6.
|