பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி319

1இவர்கள் முன்னர்க் களவொழுக்கம் ஒழுகியவாறும் அக்காலத்து அவன் புதியனாக நடித்தவாறும் இவள் ஒடுங்கியிருந்தவாறும் பிறர் அறியாராதலின், இத்தாழிசைகள் “பொழுது மாறுங் காப்புமென் 2றிவற்றின்” என்னும் (1) பொருளியற் சூத்திரத்திற் கூறிய 3காப்பின் வழுவுணர்த்தியன.

இதனால், தலைவற்குச் 4சூழ்ச்சி பிறந்தது.

“ஏவன்மரபி னேனோரும்” என்னும்(2) சூத்திரத்தில் நால்வகை வருணத்தாருங் களவொழுக்கத்திற்கு உரியரென்றலின்(3) அந்தணன் களவொழுக்கங் கூறினார்.

இது தரவும் 5தாழிசையென்றற்குஞ் சிறிதுபொருந்திய இடைநிலைப் பாட்டும் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (16)

(53)வறனுற லறியாத வழையமை நறுஞ்சாரல்
விறன்மலை வியலறை வீழ்பிடி யுழையதா
மறமிகு வேழந்தன் மாறுகொண் மைந்தினாற்
புகர்நுதல் புண்செய்த புய்கோடு போல
வுயர்முகை நறுங்காந்த ணாடோறும் புதிதீன
வயனந்தி யணிபெற வருவியார்த் திழிதரும்
பயமழை தலைஇய பாடுசால் விறல்வெற்ப;
8மறையினின் மணந்தாங்கே மருவறத் துறந்தபி
னிறைவளை நெகிழ்போட வேற்பவு மொல்லும
னயலலர் தூற்றலி னாய்நல னிழந்தகண்
கயலுமிழ் நீர்போலக் கண்பனி கலுழாக்கால்;
12இனியசெய் தகன்றுநீ யின்னாதாத் துறத்தலிற்
பனியிவள் படரெனப் பரவாமை யொல்லும

1. தொல். பொருளி. சூ. 16. இச்சூத்திரவுரையில், “ஈர்ந்த ணாடையை..................ஏனல்கா வலரே” என்பதனைக் காப்பான் வழுவுணர்த்தியதற்கு மேற்கோள்காட்டி....................அன்புபற்றிக்கூறலின் அமைந்ததென்பர், நச்.

2. தொல். அகத். சூ. 24. இதன்பக்கம், 316: 1. (ஆ) குறிப்புப்பார்க்க.

3. (அ) “பங்கயத்துப் பரத்துவன்” கம்ப. மீட்சி. 242. (ஆ) “செங்கமலப், படலை சூடிய பழமறை யந்தணர்க் கெல்லாம்” பாக. (10) சிசுபாலனை. 7. என அந்தணர்க்குத் தாமரைக்கண்ணி கூறப்படுதல் காண்க.

(பிரதிபேதம்)1 இவர்களவொழுக்கம், 2இவற்றுள், 3காப்பினான்வழு, 4சூட்சி, 5 தாழிசைக்குஞ் சிறிது.