பக்கம் எண் :

342கலித்தொகை

கொண்டாம். “அவ்வ 1மாக்களும் விலங்கு, 2மன்றிப், பிறவவண்வரினுந் திறவதினாடித,் தத்த 3மியலின் மரபொடு முடியி, னத்திறந் தானே துறையெனப்படுமே” (1) என்பதனால், ஞாழன்முடித்தாளென நெய்தற்றலைவி 4போலவும் ஊர்க்கானிவந்த பொதும்ப ரென்றதனான் மருதத்துக் கண்டான் 5போலவுங் கூறிக் குறிஞ்சிப் பொருளாகிய புணர்த 6னிமித்தம் பொருளாக முடித்தான் 7இவ்வாறு மயங்கினும் குறிஞ்சித்துறைப்பாற்பட்ட துறையுறுப்பான் வந்ததென்க.

15 (2) ஆய்தூவி யனமென வணிமயிற் பெடையெனத்
(3) 8தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினல


1. தொல். செய். சூ. 209, இச்சூத்திரத்துப் பேராசிரியருரையினும் நச்சினார்க்கினியருரையினும் (இ - வி. சூ. 583.) இலக்கண விளக்க வுரையினும் இச்செய்யுளே மேற்கோளாக இவ்விசேடக்குறிப்பு, சிறிது வேறுபட வரையப்பெற்றிருக்கின்றது.

2. (அ) “உரிப்பொருளல்லன மயங்கவும் பெறுமே” என்புழி, ”ஆய்தூவி..................அறியாயோ” என்பதை மேற்கோள் காட்டி, இது நிலம் வரையாது வந்த கைக்கிளை; இதனைக்குறிஞ்சியிற் கோத்தார் புணர்ச்சியெதிர்ப்பாடாகலின்; என (தொல். அகத். சூ. 13. நச்.) நச்சினார்க்கினியரும். (ஆ) ஒருதலைக் காமம் விரவியும் வரூஉம் என்புழி இதனை மேற்கோள்காட்டி, ‘குறிஞ்சித்திணையோடு கைக்கிளைமயங்கி வந்தது’ என (இ - வி.சூ. 395.) இ - வி. உரைகாரரும், எழுதியிருப்பன ஈண்டறியத்தக்கன. (இ) ”ஆய்தூவி யன்னம்” கலி. 66 : 6. (ஈ) ”ஆய்தூவிமடவனமே” நைடத. அன்னத்தைத் தூது. 90. 107.

3. (அ) எனவெனெச்சத்தால் உவமம் வந்ததற்கு, ”தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினலம்” என்பது மேற்கோள் (தொல். உவம. சூ. 11. பேர்) (ஆ) ”தூதுணம் புறவொடு” பட். 58. (இ) ”பொறிவரிப் புறவின் செங்காற் சேவல், சிறுபுன் பெடையொடு சேட்புலம் போகி, யரிமண லியவிற் பரறேர்ந்துண்டு” அகம். 271 : 1 - 3. (ஈ) ”கல்லுண்டு கடிய வெம்புங் கானுறை புறவ மெல்லாம்” சீவக. 1430. (உ) ”நுண்பொறிப் புறவின் செங்காற் சேவல், வெண்சிறைப் பெடையொடு விளையாட்டு விரும்பி, வன்பரலார்ந்த வயிற்ற வாகி” பெருங். (1) 52 : 46 - 8. (ஊ) ”தூதுணம் பறவைக டூதுண் டோவறக், காதலந் துணையொடு கழுமிப் புல்லுவ” (எ) “கல்லிரை தேரினும் வீழ்துணை நீங்கிற் கபோதகநோ, யல்லிரையோத மனையது” தணிகை. திருநாட். 52, களவுப். 609. (ஏ) ”கல்லிரை தேருவ

(பிரதிபேதம்)1மக்களும், 2இன்றிப் பிறவரைவரினும், 3இயலான், 4போலக்கூறி ஊர்க்கா, 5போலக்கூறிக்குறிஞ்சி, 6நிமித்தமும் பொருளாக, 7அவ்வாறு, 8தூதுணும்.