(1) நின்முகங் காணு மருந்தினே னென்னுமா னின்முகந் தான்பெறி னல்லது கொன்னே (2) மருந்து பிறிதியாது மில்லேற் றிருந்திழா யென்செய்வாங் கொல்லினி நாம் |
எ - து; அதுகேட்ட தோழி அடிபரந்த முலையினையும் ஆராய்ந்த பூணினையுமுடைய நல்லாய்! பெரிய அமர்த்த உண்கண்ணியையுடைய நின் தோழி
மருந்தெனவருங் காரணத்தைக் கருவிக்கண்ணும், நின்முகத்தைக் காண்டல் காரணமாக அதன் காரியமாகப் பிறந்த அருளை மருந்தாதற் றன்மையாக உடையனென வருங் காரியத்தை ஒன்றென முடித்தற் கண்ணும் அமைத்துக் கொள்க என்பர். நச். தொல். வினை. சூ. 37. (ஆ) ”மற்றிந்நோய் தீரு மருந்தருளா யொண்டொடீ யென்புழி, நோய்தீர்தற் கேதுவாகிய மருந்தென்னும் ஏதுப்பொருண்மை கருவிக்கண் அடங்கும்” என்பர் இ - வி உரைகார்; இ - வி. .சூ. 243. (இ) 'நோய்தீருமருந்து....................என்னும்ஏதுப்பொருண்மை கருவிக்கண் அடங்கும்’ என்பர், சேனாவரையர்; தொல். வினை. சூ. 37. (ஈ) ”அகலிருவிசும்பு” பெரும்பாண். 1. என்பதற்கு, ‘தன்னை யொழிந்த நான்கு பூதமும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமாகிய பெரிய ஆகாயம்’ என்று பொருள்கூறி அதற்கும் (உ) ”அரசிருந்து பனிக் கும்பாசறை” முல்லை. 79. என்பதற்கு, 'பகையரசிருந்து நடுங்குதற்குக் காரணமான பாசறை' என்று பொருள்கூறி அதற்கும், (ஊ) ”புண்டாங்குவேல்” சீவக .22. என்பதற்கு ‘பகைவர் புண்ணைத் தாங்குவதற்குக் காரணமான வேல்’ என்று பொருளும் ‘வினைத்தொகை;ஏதுப் பொருள்கருவிக்கண் அடங்கும்’ என்று இலக்கணமும்எழுதி அதற்கும் “மற்றிந்நோய் தீருமருந்து” என்பதை இவ்வுரையாசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார். அன்றியும் (எ) உயர்ந்தபால் என்பதற்கு, 'ஒருகாலைக்கு ஒருகால் அன்பு முதலியன சிறத்தற்கு ஏதுவாகிய பால் வரை தெய்வம்’ என்று பொருள்கூறி,’ உயர்ந்த பாலை நோய்தீர்ந்த மருந்து போற் கொள்க’ என்றும் எழுதியிருக்கிறார். தொல். களவி. சூ. 2.) (ஏ) ”திருந்தடி மேல்வீழ்ந்திரக்குநோய் தீர்க்கு, மருந்து நீயாகுதலான்” கலி. 63 : 9 - 10. என்பது ஒப்புநோக்கற்பாலது. 1. (அ) ”நின்முகங் காணு மருந்தினே னென்னுமாலென்புழிக்காட்சியை மருந்தென்றானாதலின், காணுமருந்தென்பது வினைப்பெயர் கொண்டதாம்” என்பர். சேனா; தொல். வினை சூ. 37. (ஆ) ”இ - வி. உரைகாரரும் இதனையே பின்பற்றுவர்; இ-வி.சூ. 243. 2. (அ) ”மருந்துபிறி தில்லையா னுற்ற நோய்க்கே” நற் 80 : 9 (ஆ) ”மருந்துபிறி தில்லாப் பெருந்துய ரெய்தி”........................ (இ) ”மந்திரமில்லை வேறோர் மருந்தில்லை மையனோய்க்குச், சுந்தரக்குமுதச்செவ்வாயமுதலா லமுதச் சொல்லீர்” கம்ப. மாயாசனக. 16.
|