பக்கம் எண் :

398கலித்தொகை

வொளிபூத்த நுதலாரோ டோரணிப் பொலிந்தநின் 
களிதட்ப வந்தவிக் கவின்காண வியைந்ததை;
எனவாங்கு;
22 அளிபெற்றே மெம்மைநீ யருளினை விளியாது
வேட்டோர் திறத்து விரும்பியநின் பாகனு
நீட்டித்தா யென்று கடாஅங் கடுந்திண்டேர்
பூட்டு விடாஅ நிறுத்து.

இது பரத்தையிற் பிரிந்துவந்த தலைவன் 1தனது ஆற்றாமையே வாயிலாகத் தலைவியுழைச் சென்றாற்கு. அவன்முன்பு வதுவையயர்ந்ததூஉம் அப்பொழுது புனலாடியதூஉம் இப்பொழுது துணங்கையாடியதூஉங் கூறிப் புலந்தாள் 2தலைவி. அவள் புலந்தவாறுகண்டு சென்றுசார்ந்த தலைமகனுடன்ஊடல் தீர்கின்றாள் கூறியது.

இதன் பொருள்.

(1)வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட 
ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த (2)வரிவண்


1. கலியடி பதினான்கெழுத்தான்வந்ததற்கு,"வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட" என்பது மேற்கோள். தொல். செய், சூ, 15, 'அளவடி' இளம். ('வீங்கு' என்பதிலுள்ள குற்றியலுகரம் அலகுபெறாது,)

2. (அ) "சுரும்புணக் களித்த புகர்முக வேழம்" ஐங். 239. (ஆ) "வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்துப்,
பொறிநுதற் பொலிந்த வயக்களிற் றொருத்தல்" அகம். 78 : 3-4. (இ) "மிஞிறார்க்கும் கமழ் கடாஅத்து...........மழகளிறு" (ஈ) "வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத், தண்ணல் யானை" புறம். 22. 6-8, 93 : 12-3. (உ) "வரிவண் டார்க்கும் வாய்புகு கடாஅத்த, வண்ணல்யானை" தொல். களவி, சூ, 11, நச், 'எண்ணியது' மேற்கோள். (ஊ) "அந்தணாற்றத்து, மதக்களி சுவைக்கு மணிநிறப் பறவை.............குஞ்சரம்" பெருங். (1)58 : 12 - 8. (எ) "கரிமதத் தளியைப் போன்றும்...............தெரிவின்றி நுகர்ந்ததெல்லாம்" மேரு. 8 : 60. (ஏ) "வேழத்தின், வண்டுளர் நறுமதமழையும்" (ஐ) "மூசு வண்டின மும்மத யானையி, னாசை கொண்டன போற்றொடர்ந் தாடின, வோசையொண்கடற் குன்றொடவைபுக, வேசை மங்கைய ராமென மீண்டவே" கம்ப. பம்பை, 12. சேதுபந்தன. 58. (ஒ) "மடந்தைய ரளகமு மாந்தர் மாலையு, முடைந்துகு கடகரி மதமு முன்னியே, தடந்தொறு முரலளி தமரி னண்புறத், தொடர்ந்துடன் வரவரச் சோலையெய்தினார்" (ஓ) "தும்பி மேன்மதத் திடைவிழும் தும்பிபோல்" (ஒள) "வண்டின மொய்க்க மதம்பொழி கரியும்" 

(பிரதிபேதம்) 1தன்னாற்றாமை, 2தலைவனை புலந்தவாறு.