பக்கம் எண் :

மூன்றாவது மருதம்413

நினைவு கெடுகின்ற நெஞ்சத்தினையுடைய யாங்கள் நின்பெண்டிருள் நேராகி ஊரன் உரனல்லனென்ற வார்த்தையைக் களைந்து, நின்குறியிடத்தே வந்து ஆண்டுக் காணாமையின் எம்மிடத்தே வந்தாயென்று கருதி எங் கதவத்தைச் சேர்ந்து தட்டின கையின் வளையினாலே தம் வரவினைச் 1சொல்லுதலை இயல்பாகவுடைய அப்பரத்தையரை நோவேமோ? அதற்கு யாங்கள் உரியே மல்லேமே; எ - று.

இது 2"வண்ணம் பசந்து புலம்புறு காலை, யுணர்ந்த போல 3வுறுப்பினைக் கிழவி, புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே"(1) என்பதனான் உறுப்பினை உணர்வுடையதுபோற் கூறிற்று.

12 ஊடியார் நலந்தேம்ப வொடியெறிந் தவர்வயின்
மாறீர்க்கு மவள்மார்பென் றெழுந்தசொன் னோவேமோ
முகை 4வாய்த்த (2)முலைபாயக் குழைந்தநின் றாரெள்ள
(3)வகைவரிச் (4)செப்பினுள் வைகிய கோதையேம்

எ - து; முகையின்றன்மை வாய்த்த முலைகள் முயங்குகையினாலே 5செவ்வி குலைந்த நினதுமாலை எம்மை இகழ்ந்துகூறக், கூறுபாட்டினை 6யுடைத்தாகிய 7வரியினையுடைய பூச்செப்பிலே பயன்படாது தங்கிய மாலைத்தன்மையை யுடைய யாங்கள் இற்பரத்தையர் ஊடினமகளிர் ஊடலைத்தீர்த்து முயங்காதே அவர்கள் நலங்கெடும்படி அவரை (1)


1. தொல். பொருளி. சூ.8. இச்சூத்திரத்தினுரையிலும் இவர், தலைவி தன்மேனி பசந்து தனிப்பட ருறுங் காலத்துத் தனது உறுப்பினை உணர்ந்ததுபோலக் கூறினதற்கு, "கேளல.................நெஞ்சத்தேம்" என்பதை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

2. "ஒல்லா முயக்கிடைக் குழைகவென் றாரே" புறம். 73 : 14.

3. "வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போற், றகைநலம் வாடி மலர் வனம் புகூஉ, மாதவி பயந்த மணிமே கலையொடு" மணி. 4 : 65-67.

4. (அ) "பெய்யாது வைகிய கோதை போல, மெய்சா யினையவர் செய்குறி பிழைப்ப" நற். 11 : 1 - 2.
(ஆ) "மடைமாண் செப்பிற் றமிய வைகிய, பெய்யாப் பூவின் மெய்சா யினளே" குறுந். 9. (இ) "பீர்தங்கிப் பெய்யா மலரிற்பிறி தாயி னாளே" சீவக. 1960. என்பவையும் (ஈ) "பாதிரிக் குறு மயிர் மாமலர், நறுமோரோடமொ டுடனெறிந் தடைச்சிய, செப்பிடந் தன்ன நாற்றம்" நற். 337 : 4 - 6.
(உ) "செப்புவாயவிழ்ந்த தேம்பொதி நறுவிரை, நறுமலர்" சிலப். 22 : 121. (ஊ) "பித்திகைக் கோதை செப்புவாய் மலரவும்" பெருங். (1) 33 : 76.

(பிரதிபேதம்) 1சொல்லுதலையுடைய பரத்தையரை, 2வண்ணந்திரிந்து புலம்புறுகாலை, 3உறுப்பினைக்கிளவி புணர்ந்த, 4வாய்ந்த, 5செவ்விகுலைந்த மாலையெம்மை, 6உடைத்தாகிய வச்செப்பிலே, 7வரியினையுடைய செப்பிலே.