(1)மாதர்கொண் மானோக்கின் மடந்தைததன் றுணையாக (2) 1வோதுடை யந்தண (3)னெரிவலஞ் செய்வான்போ (4) லாய்தூவி யன்னந்தன் னணிநடைப் பெடையொடு மேதகத் திரிதரூஉ மிகுபுன னல்லூர எ - து; 2உத்தரீயத்துள்ளேநாணால் ஒடுங்கிநோக்குகின்ற (5)காதல்கொண்ட (6)மான்போலுநோக்கினையுடையமடந்தை தனக்கு (7)இம்மை
யாவரறை கிற்பார்" சூளா.கல்யாண, 277. என்பவைகளும் (இ) "வதுவையயர்தல் வேண்டுவலாங்குப் புதுவை போலுநின்வரவுமிவள், வதுவைநா ணொடுக்கமுங் காண்குவல் யானே" (கலி. 52 : 23 - 5) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 1. "மாதர்கொண் மானோக்கின் மடநல்லாய்" கலி. 56 : 17. 2. (அ) "அந்தண ரோத்துடைமை யாற்ற மிகவினிதே" இனியது. 7. (ஆ) "ஓத்துடை யந்தணர்க்கு" மணி. 13: 25. 3. (அ) "சாலி யொருமீன் றகையாளைக் கோவலன், மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத், தீவலஞ் செய்வது காண்பார்க ணோன் பென்னை" சிலப். 1 : 51 - 53. (ஆ) "இட்ட வுத்தரியமின்னு மெரி மணிப்பருமுத்தார, மட்டவிழ்கோதை வெய்ய வருமுலைதாங்கலாற்றா, நெட்டிருங் கூந்த லாட னேர்வளை முன்கை பற்றிக், கட்டழல் வலங் கொண்டாய் பொற் கட்டிறானேறினானே" (இ) "குளிர்மதி கொண்ட நாகங் கோள்விடுக் கின்றதேபோற், றளிர்புரை கோதைமாதர் தாமரை முகத்தைச்சேர்ந்த, வொளிர்வளைக் கையைச் செல்வன் விடுத்தவ ளிடக் கைபற்றி, வளரெரி வலங்கொண் டாய்பொற் கட்டிறா னேறி னானே" சீவக. 835, 2468. (ஈ) "தங்கழல் வேள்விமுற்றித் தையலக் காளையோடும், பொங்கழல் வலஞ்செய் போழ்தில்" சூளா. சுயம்வர. 278. (உ) "இடம்படு தோளவ னோடியை வேள்வி, தொடங்கிய வெங்கனல் சூழ்வரு போதின், மடம்படு சிந்தையண் மாறு பிறப்பி, னுடம்புயிரைத்தொடர் கின்றதை யொத்தாள்" கம்ப. கடிமண. 91. (ஊ) "தன்மங் கலந்த மனத்தோனையத் தைய லோடுந், தொன்மங் கலச்செஞ் சுடர்த்தீவலஞ் சூழுவித்தார்" வில்லி. திரௌபதிமாலை. 94. (எ) "பொங்கு செந்தழல் சூழ்வந்து" நைடதம். மணம். 20. 4. "ஆய்தூவி யனமென" கலி. 56 : 15. 5. "மாதர் காதல்" என்பது தொல். உரிச.் சூ. 30. இச்சொல் ஈறு திரிந்து மாதென்றும் வரும். 6. மான் போலும் நோக்கு - மானோக்குப் போலும் நோக்கு. 7. "இம்மை மாறி மறுமை யாயினு, நீயா கியரெங் கணவனை, யானாகியர்நின் னெஞ்சுநேர் பவளே". குறுந். 49. (பிரதிபேதம்) 1ஓத்துடையந்தணன், 2உத்தரியத்துள்ளே.
|