(1) 1விரியுளைக் கலிமான் றேரொடு வந்த (2) விருந்தெதிர் 2கோடலின் மறப்ப லென்றும் எ - து: வதுவை அயர்ந்த 3பின்பு விளக்கத்தினையுடையையாய் வாராநின்றாய், எம்மை எத்தன்மையாகக் கருதினாயெனப் புலந்துகூறிப் பின்னர் ஒரு மொழியைக் கூறாதிருப்பேனாயின் அது 4நீங்கப் பரந்த கழுத்தின்மயிரினையும் மனச்செருக்கினையுமுடைய குதிரை பூண்ட தேரிலே ஆரவாரிப்பக் கொண்டு வந்த விருந்தினரை எதிர்கொள்ளுகையினாலே எந்நாளும் புலவியை (3) 5மறப்பேன். எ - று. 18 | வாடிய பூவொடு வாரலெம் மனையென வூடி யிருப்பெ னாயி னீடா |
லென்றும்" எனத் தரவகப்பட்ட தாழிசை வருதல் கொள்கவென்பர், நச்; தொல். செய். சூ. 134. 1. தனக்கொத்த இல்லறம் இன்னதென்று தலைமகள் மனத்துட்படுதலாகிய "புரையறந் தெளிதல்" என்பதற்கு, "விரியுளை.............மறப்பலென்றும்" என்னும் பகுதியை மேற்கோள் காட்டி, இது அவனொடு சொல்லாடாது ஊடியிருப்பேனாயின் விருந்து கொண்டு புகுதரும்; அதனால் ஊடலை மறப்பே னென்றமையிற் புரையறந்தெளிதலாயிற்றென்பர், பேர்; தொல். மெய்ப். சூ. 24; இ - வி. நூலாரும் இதனையே எழுதுவர்; இ - வி. சூ. 580. 2. "உருவிலாள னொருபெருஞ் சேனை, யிகமல ராட்டி யெதிர்நின்று விலக்கியவ, ரெழுதுவரி கோல முழுமெயு முறீஇ, விருந்தொடு புக்க பெருந்தோட் கனவரொ, டுடனுறைவு மரீஇ யொழுக்கொடுபுணர்ந்த, வடமீன் கற்பின் மனையுறை மகளிர், மாதர்வாண் முகத்து மணித் தோட்டுக்குவளைப், போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை, விருந்திற் றீர்ந்தில தாயின் யாவது, மருந்துந் தருங்கொலிம் மாநில வரைப்பெனக்கையற்று நடுங்கு நல்வினை நடுநாள்" சிலப். 5 : 224 - 234. 3. "மறைப்ப லென்றும்" என்று தொல். செய். சூ. 134. நச். உரை மேற்கோளிற்காணப்படு மூலமும் மறைப்பேனென்று ஒரு பிரதியிற் காணப்படும் உரையு மாகிய பிரதிபேதம், 'விருந்து கண்டொளித்த வூடல் பள்ளியிடத்து வெளிப்படல்' என்னும் கோவைக்கிளவியை நோக்கப் பொருத்தமுடையதாய்த் தோற்றுகிறது; கலித்தொகை ஏடு எல்லாவற்றின் மூலமும் பலவற்றினுரையும் அவ்வாறு இல்லை. (பிரதிபேதம்) 1விரியுழைக்கலிமான் றேரொடும் வந்த, 2கொண்டலின் மறைப்பல், 3பின் விளக்கத்தினை, 4 நீங்கத்தேரிலே கொண்டுவந்த, 5 மறைப்பேன் பரந்தகழுத்தின் மயி...........கொண்டு வந்தவிருந்து, வாடிய பூவொடு.
|