21 | (1) 1கடைஇய நின்மார்பு தோயல மென்னு மிடையு நிறையு மெளிதோநிற் காணிற் கடவுபு கைத்தங்கா (2) நெஞ்சென்னுந் தம்மோ டுடன்வாழ் பகையுடை யார்க்கு. |
எ - து: "தம்முறு விழுமம் பரத்தையர் கூறினு, மெய்ம்மையாக வவர்வயினுணர்ந்து, தலைத்தாட் கழறறம் 2மெதிர்பொழு தின்றே, மலிதலு மூடலு மவையலங் கடையே" (3) என்பதனாற் பரத்தையர் முன்னரன்மையின் மலிதலும் ஊடலும் 3நிகழ்த்துதலைக்கழறினாள், நின்னைக் காணில் என்னை உன்னிடத்தே செலுத்தித் தானும் நின்னிடத்தே 4தங்கி வருந்துநெஞ் சென்று சொல்லப்படுந் தம்மோடு ஒன்றாய் வாழப்படுகின்ற உட்பகையை யுடையார்க்கு முன்னர் எம்மை நின்மேல் வீழ்வித்த நின் மார்பைக் கூடக் கடவேமல்லேமென்று 5கருதும் (4) நிறையென்னுங் குணத்தையும் பெறுதலெளிதோ? அஃது அரிதன்றோ? என ஊடறீர்ந்தாள். எ - று. இடையும் 6நெஞ்சென்க. நிறையுமென்னும் உம்மை, சிறப்பு. இதனால், தலைவிக்குப் புணர்ச்சியுவகை பிறந்தது. 7"அருண்முந் துறுத்த வன்புபொதி கிளவி, பொருள்பட மொழிதல் கிழவோட்கு முரித்தே," (5) என்பதனால் 8'வாராமற் பெறுகற்பின்' என்ற தலைவி 'நிற்காணிற் கடவுபு கைத்தங்கா நெஞ்சு' என அவனாற்றாமை கண்டருளி நெஞ்சு ஏவல் 9செய்ததென வேறோர் பொருள்பயப்பத் தன் அன்பினைக் கரந்தவாறு காண்க. இது வெள்ளைச் சுரிதகத்தா லிற்ற ஒத்தாழிசைக்கலி. (12)
1. பெயரெச்ச வினைத்திரி சொல்லுக்கு, 'கடைஇய நின் மார்பு' என்பது மேற்கோள்; தொல். எச்ச. சூ. 61. நச். 2. (அ) "அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே, நீயெமக் காகாதது" குறள். 1291. என்பதும் (ஆ) "அறைபோகு நெஞ்சுடை யார்க்கு" (கலி. 67 : 21) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 3. தொல். பொருளி. சூ. 41. இச்சூத்திரத்தின் இவருரையில் ''பொன்னென. .....................உரையாமற் பெறுகற்பின்'' என்பதுமேற்கோளாக ‘இது பரத்தையர் முன்னரன்மையின் மலிதலும் ஊடலும் நிகழ்ந்து தலைத்தாட்கழறியது’. என்னும் திருத்தமான குறிப்புக் காணப்படுகின்றது. 4. இந்நூற் பக்கம் 419 : 6-ஆம் குறிப்புப் பார்க்க. 5. தொல். கற்பி. சூ. 20. இச்சூத்திரத்தின் இவருரையிலும் இப்பாட்டு மேற்கோளாக இக்குறிப்பு, சிறிது வேறுபடக் குறிக்கப்பெற்றுள்ளது. (பிரதிபேதம்) 1தடைஇய, 2எதிர்ப்பொழுது, 3நிகழத்துத்தலைக்கழறினாள், 4தங்கியிருந்து நெஞ்சென்று, 5கருதுமிடைநிறை, 6நெஞ்செனக் கூட்டுக, 7அருளெழுந்துறுத்த, 8வாராமை பெறுகற்பின், 9செய்ததென வென்றோர்.
|