பக்கம் எண் :

மூன்றாவது மருதம்479

(1) பாலோ டலர்ந்த முலைமறந்து முற்றத்துக்
(2) கால்வறேர் கையி னியக்கி நடை பயிற்றா
(3)வாலமர் செல்வ னணிசால்
(4) பெருவிறல் போல வருமென் னுயிர்

எ - து : மாசற விளங்கிய (5) மணியை ஒக்கின்ற அழகினையுடைய வாய் தன்னுடைய எழுத்துவடிவு பெறாத (6) மழலைச்சொல்லைக் கூறுதலாற் பிறந்த நீராலே விளங்குகின்ற பூணை நனைத்தலைச் செய்யாநிற்க, நன்மைபெறுகின்ற கமழுந்தலையிற் கிடந்த பொன்னாற்செய்த பிறையுட் சேர்த்த முத்துவடத்தோடே நெற்றியிலே ஞான்ற 1புனைந்த வினையினையுடைய உருண்ட சுட்டி விளக்கத்தோடே அசைய, நிறத்தை ஒழியாமல் தன் நடுவே தோற்றுவிக்கும்


(எ) "கிண்கிணிக்கான் மைந்தர்" கூர்ம. தக்கனைச்சபித்த. 8. (ஏ) "கிண்கிணிக்காற் புதல்வன்" காசி. அமுதேசன். 7.

1. "காலத்திற் றோன்றிய கொண்மூப்போ லெம்முலை, பாலொடு வீங்க" கலி. 82 : 2 - 3.

2. "வைக, லெண்டேர் செய்யுந் தச்சன், றிங்கள் வலித்த காலன் னோனே" (புறம். 87 : 2 - 4) என்பதும் 'தேர்க்காலோடு உவமை விரைவுந்திண்மையுமாகக்கொள்க' என்னும் அதன்பகுதியின் விசேட வுரையும் இங்கே அறிதற்பாலன.

3. (அ) சிறப்புச்சொல், உயிர்போற் சிறந்தானை உயிரென்றல் என்பர். சேனாவரையர்; தொல். கிளவி. சூ. 56.
(ஆ) நச்சினார்க்கினியர் இவ்வாறுகூறி, "ஆலமர்..............உயிர்" என்பதை மேற்கோளும் காட்டுவர். (இ) உயர்திணை அஃறிணையாய்ச் சிறப்பின்கண் திணைமயங்கி வந்ததற்கு இதனை மேற்கோள்காட்டுவர். இ - வி. நூலார்; இ - வி. சூ. 299. (ஈ) "ஆலமர் செல்வன் மகன்" கலி. 83 : 14. என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

4. 'பெருவிறல்' விறற்சொல்லென்பர் சேனாவரையரும். நச்சினார்க்கினியரும். தொல். கிளவி. சூ. 56. 57.

5. மணி - பவளம் ; மாணிக்கமுமாம்.

6. (அ) "பொன்னொடு குயின்ற பன்மணித் தாலித், தன்மார்பு நனைப்பதன் றலையு மிஃதோ, மணித்தகைச் செவ்வாய் மழலையங் கிளவி, புலர்த்தகைச் சாந்தம் புலர்தொறு நனைப்ப" தொல். கற். சூ. 9. நச். மேற்கோள். (ஆ) "செந்துகிர்வா, யூறு நீர்நனை மார்பினோ டிளமகாருந்தி, யேறு மின்பமுள் ளதனையே யுடம்பென விசைப்பார்" சீகாளத்தி. கண்ணப்பர். 10.

(பிரதிபேதம்) 1புனைந்த விழையினை.