| தொடக்கத்துத் தாயுழைப் புக்காற் கவளு மருப்புப்பூண் கையுறை யாக வணிந்து பெருமா னகைமுகங் காட்டென்பாள் (1) கண்ணீர் சொரி (2) முத்தங் காழ்சோர்வ போன்றன மற்றும் | 15 | வழிமுறைத் தாயுழைப் புக்காற் கவளு மயங்குநோய் தாங்கி மகனெதிர் வந்து |
'அடக்கமில்......................போன்றன' என்பது முதிர்ந்தாள் உண்ணயந்து கூறியது. 'மற்றும், வழிமுறை...................அணிந்தனள்' இதனுள் நோய் தாங்கின ளென இளமைப்பருவத்து மகிழ்ச்சியும் முதிர்ந்த பருவத்து மறவியுந்தோன்றக் கூறாமையினானும் வழிமுறைத்தாய் என்றமை யானும் இஃது இடை நிலைப்பருவத்தாள் கூற்று. 'அவட்கினிதாகி.........................புக்கான்' என்றவழி, புத்தேளென்றதுவும் தலைநின்றொழுகு மிளையோளைக் கூறியது'' என்று (தொல். கற்பி. சூ. 10.) நச்சினார்க்கினியரும், "முதலொடு புணர்ந்த" என்பதனுரையில், ஞாலம் வறந்தீர வென்னு மருதக்கலியுள், 'அடக்கமில் ....................புக்கான்' எனவும் 'வழிமுறைத் தாயுழைப் புக்கான்' எனவும் 'புத்தவளில் புக்கான்' எனவும் வருவனவற்றுள், தொடக்கத்துத்தாய், வழிமுறைத்தாய், புத்தவள் இவ்வாறு வகுத்துக் கூறக் கேட்கின்ற காமக்கிழத்தியென மனைவியர் நால்வருளரன்றோ! அவரெல்லாரையும் கூறாது மனைக்கிழத்தியர் இருவரென்றதனாற் பயனின்றேயெனின், அவரெல்லாரும் இற்கிழத்தி காமக்கிழத்தியென்ற இரண்டு பகுப்பினுள் அடங்குப என்க" என்றும். (தொல். களவி. சூ. 16.) "புலலுதன் மயக்கும்" என்பதனுரையில், 'பிறவும்' என்றதனால், தலைமகட்குரித்தாகச் சொல்லப்பட்டவற்றுள் ஒப்பன கொள்ளப்படும் என்று கூறி, "ஞாலம் வறந்தீரவென்னு மருதக்கலியுள், 'அடக்கமில்..........................புக்கான்' எனவும். 'வழிமுறைத் தாயுழைப் புக்கான்' எனவுங் 'தலைக்கொண்டு..................... புக்கான் எனவும் கூறுதலிற் புதல்வனை ஈன்றாள் மூன்றாங் காமக்கிழத்தி யாயினவாறும் இவன்மாட்டுத் தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை, மாயப்பரத்தை யுள்ளிக் கூற்று நிகழந்தவாறும் கண்டுகொள்க" என்றும் (தெல். கற்பி. சூ. 10.) இளம்பூரணரும் எழுதியிருப்பவை இங்கே ஆராய்தற்பாலன. 1. "கலங்காவுள்ளங் கலங்கக் கடைசிவந்து, விலங்கி நிமிர் நெடுங்கண் புலம்புமுத் துறைப்ப" சிலப். 4 : 70 - 71. 2. "முத்து நேர்பு புணர்காழ" பரி. 16 : 5.
|