மூதாயினது புகரையுடத்தாகிய நிறத்தையுடைய பவளத்தாற் செய்த அழுக்கற விளங்கிய இடபத்தையுடைய விளங்குகின்ற பூண். எ - று.
12 | சூடின, இருங்கடன் 1முத்தமும் பன்மணி 2பிறவு மாங் கொருங்குடன் கோத்த வுருளமை (1) முக்காழ்மேற் சுரும்பார் கண்ணிக்குச் சூழ்நூ லாக வரும்பவிழ் நீலத் தாயிதழ் நாணச் (2) சுரும்பாற்றுப் படுத்த மணிமருண் மாலை |
எ - து: சூடப்பட்டன, கரிய கடலின் முத்தும் அதனுடனே பல மணிகள் பிறவுஞ் சேரக்கோத்த உருட்சி அமைந்த மூன்றுவடம்; அதின்மேலே கிடக்கும் நூலாற் சூழ்ந்த சுரும்புகள் ஆருங் கண்ணிக்குப் 3பொருந்தும்படியாக நடுவே கிடக்க அரும்புகள் அலர்ந்த சில நீலத்தினது ஆய்ந்த இதழ் நாணும் படியாக நீலமணியாற் பண்ணின சுரும்புகளைப் போக்கின கண்டார் மருளும் மாலை. எ - று. 17 | ஆங்க, உரையசை. அவ்வும் பிறவு மணிக்கணி யாகநின் 4செல்வுறு திண் (3) டேர்க் கொடுஞ்சினை கைப்பற்றிப் பைபயத் தூங்குநின் மெல்விரற் சீறடி நோதலு 5முண்டீங் கென்கை வந்தீ செம்மானின் பாலுண் ணிய |
எ - து: யான் கூறியவையும் பிறவும் நின்னழகிற்குமேலே ஓர் அழகாகச் செறியும் நின்னுடைய மெல்லிய விரல்களையுடைய சிறிய அடிகள் இங்ஙனந் திரிந்ததற்கு நோதலுமுண்டு; அதனைத் தவிர்ந்து நின்னுடைய உருட்டுதலுறுகின்ற திண்ணிய தேரில் வளைந்த (4) தாமரைமுகையினைக் கையாலே பிடித்து மெத்தென மெத்தென அசையாநின்று இவ்விடத்து என் கையிடத்தே வருவாய்; நினக்கென்று வைத்த பாலையுண்டற்கு. எ - று.
1. (அ) "முக்காழ் கயந்தலைத்தாழ" கலி. 86 : 2. (ஆ) "மயிர்ப்புறஞ் சுற்றிய கயிற்கடை முக்காழ்" மணி. 3 : 135. 2. (அ) "கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர்" குறுந். 241. (ஆ) "கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமொடு" மணி. 5 : 139. 3. (அ) "நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி, நின்றோன்" அகம். 110 : 24 - 5. (ஆ) "மணித்தேர்க் கொடுஞ்சி கையாற் பற்றி" மணி. 4 : 48. 4. (அ) "பண்டரித னுந்தியயன் வந்தபழ முந்தைப், புண்டரிக மொட்டனைய மொட்டினது" கம்ப. தேரேறு. 47. (ஆ) "கோகனக முகையனைய கொழுங்கனகக் கொடுஞ்சியன" இராமா. சந்திர. 8. (பிரதிபேதம்)1முத்தும், 2பிறவு, மொருங்கு, 3பொருத்தும்படி, 4செய்வுறு, 5 உண்டிங்கு.
|