பக்கம் எண் :

மூன்றாவது மருதம்543

அரிநீ ரவிழ்நீல மல்லி யனிச்சம் 
1புரிநெகிழ் முல்லை நறவோ டமைந்த
தெரிமலர்க் கண்ணியுந் தாரு நயந்தார்
பொருமுரண் சீறச் 2சிதைந்து நெருநையி
னின்றுநன் றென்னையணி

எ - து : 3நறாம்பூவோடே அழகிய நீரில் அவிழ்ந்த அல்லியையுடைய நீலப்பூ அனிச்சப்பூ முறுக்கு நெகிழ்ந்த முல்லைப்பூப் 4பொருந்தின (1) மார்பின் மாலையும் ஆராய்ந்த நறியமலராற்செய்த கண்ணியும் விரும்பின பரத்தையர் ஊடுகின்ற மாறுபாட்டாலே கோபித்துப் பற்ற நிறங்கெட்டு என்னையுடைய ஒப்பனை நேற்றையில் இன்று நன்றாயிருந்ததென்றாள். 5எ-று.

கண்ணி, வகைமாலை.

“அன்னை யென்னை யென்றலு முளவே, தொன்னெறி முறைமை சொல்லினுமெழுத்தினுந், தோன்றா 6மரபின வென்மனார் புலவர்" (2) என்பதனால், தலைவனை என்னை யென்றாள்.

6 (3)அணைமென்றோளாய், செய்யாத சொல்லிச் சினவுவ தீங்கெவ
 னையத்தா லென்னைக் கதியாதி தீதின்மை
 தெய்வத்தாற் கண்டீ தெளிக்கு

எ - து : அதுகேட்ட தலைவன், அணைபோலு மெல்லிதாய தோளினை யுடையாய்! இவன் 7நீங்கிற் பரத்தையரிடத்தல்லது நீங்கானென்று உட்கொண்டு அவ்வையத்தாலே யான் செய்யாதகாரியங்களைச்சொல்லி இவ்விடத்தே சினக்கின்ற குறை யாதுதான்? என்னிடத்துத் தீதில்லாமையைத் தெய்வத்தாலே நினக்குத் தெளிவிப்பேன்; அதனைக் காண்பாய்; இனி என்னைக் கோபியாதே கொள்ளென்றான். எ-று.

9மற்றது, அறிவல்யா னின்சூ ளனைத்தாக நல்லார்
செறி (4)தொடி யுற்ற வடுவுங் குறிபொய்த்தார்

1. “தாருந் தானையும் பற்றி" அகம் 276 : 9.

2. தொல். பொருளி. சூ. 52.

3. இந்நுாற்பக்கம், 343: 4 - ஆம் குறிப்பும் 400 : 4 - ஆம் குறிப்பும் பார்க்க.

4. தொடியால் வடு வுறுத்தலை, கலி. 71. 16-ம் அடியாலும் அதன்குறிப்பாலும் உகிரால் வடு வுறுத்தலை, கலி. 72 : 11-ம் அடியாலும் அதன் குறிப்பாலும் அறிக.

(பிரதிபேதம்) 1.புரிநெகிழ்ந்தமுல்லை, 2. சிறைந்து, 3. நாாம்பூவோடே அழகினையுடைய நீரிலே அலர்ந்த, 4. பொருந்தினதலைமாலையும் ஆராய்ந்த.....................கண்ணி. இது வகைமாலை கண்ணியும் மார்பின் மாலையும் நின்னை விரும்பின பரத்தையர், 5. எ - று. அன்னையென்னை, 6. மரபினென்மனார், 7. நீங்கிப்பரத்தையரிடத்து.