எ - து: அதுகேட்ட தலைவன், நீவிரையாதேகொள்; பின்னைக் கோபிப்பாயென்றான். அதுகேட்ட தலைவி மேல் உரையென்றாள். அதுகேட்ட தலைவன் இனிய நகையினையுடைய நல்லாய்! ஆண்டுப் பிறந்தது இதுவாயிருக்கும்; அதனைக்கேள்; கொடியையொத்த அழகினையுடையார் தாம் அக்காவிடத்து எழுந்து நின்றதோர் பூங்கொடியை எல்லார்க்கும் பொதுவாகக் கொண்டு வளைத்து அதிற் கொத்துக்களைப் பறிக்க விரைந்த வரியினையுடைய வண்டின்றிரள் கொம்புகள் அலர்ந்த வேப்பந்தாரினையுடைய (1) 1பொதியிலையுடையவன் பொருத பகைப்புலத்து அரண்போல அவ்விடத்தே உடைந்தது. எ - று. உடைந்தன்றென்பது, றகரம்ஊர்ந்த குன்றியலுகரவீற்று முற்றுச்சொல்; “வந்தன்று” (2)என்பதுபோல. 30 | மற்றாங்கே, நேரிணர் மூசிய (3)வண்டெல்லா மவ்வழிக் | | காரிகை நல்லார் நலங்கவர்ந் துண்பபோ 2லோராங்கு மூச | | அவருள், |
1. பொருப்பென்பது பொதியின்மலைக்குப் பெயராய் வருதலை இந்நூற் பக்கம் 195: 1-ஆம் குறிப்பாலும் “பொருப்பு நறுஞ்சந் தனஞ்சேறு” (பிரபு. பிரபுதேவர். 60) என்பதனாலும் அறிக. 2. கலி. 24: 25; 32: 18: 33: 8; 36; 10; 143; 41. 3. (அ) "வண்டு வழிபடரும் வாட்கண்ணாய்”(ஆ) "பூப்பிழைத்து வண்டு புடையாடுங் கண்ணினாய்”(இ) "எதிர்நீர் தூவு மிளையோர் திருமுகத், தாழ மிகவா வரிபரந் தகன்ற, மாழை யுண்கண் மலரென மதித்துத், தண்செங் கழுநீர்த் தகைமலர்த் தாது, மொண்செந் தாமரைப் பைம்பொற் றாது, மாராய்ந் துழிதரு மஞ்சிறை வண்டின, மோராங்கு நிலைபெற் றுண்ணெகிழ்ந் தவிழ்ந்த, பேரா விவையெனப் பேர்தல் செல்லா, மொய்த்தலின் மற்றவை மொய்ப்பி னீங்கத், தத்தரிநெடுங் கண்டகைவிரல் புதைஇப், புதுமணமகளிரிற் கதுமெனத் தோன்று, மதுர மழலை மடவோர்க் காண்மின்” (ஈ) ”ஆட்டு குங்குமக் கொழுங்களி யளாயசெங் கமலஞ், சேட்டிங்கதிர் முலையென வொழிந்துவெண் டிங்கள், காட்டு வாணுதற் கன்னிய ரெழுதுசாந் தழிந்த, மோட்டு வெம்முலை முளரியென் றளிகுல மொய்ப்ப” (உ) ”விரும்பித் தேனுகர் வீகளை யுந்தொறுங், கரும்பிற் றேமொழிக் காரிகை யார்முலைச், சுரும் புற் றார்ப்பவித் தோடவிழ் செவ்விய, வரும்பிற் றேனுமுண் பாமெனு மாசையால்” (ஊ) ”களையக் கைகளை பற்று தொறுந்தொழி, லுளையப் பூவென் றொளிமுகம் பாய்வன, விளைமட் டூட்டலர் வீத னிறுத்துமத், தெளிவைத் தேறிய போற்சிறை வண்டினம்” என்பவை இங்கே அறிதற்பாலன. (பிரதிபேதம்) 1. பொதியினையுடையவன், 2. ஓராங்காங்க மூச வவருள்.
|