பக்கம் எண் :

568கலித்தொகை

எ - து: கரையில் நின்றதொன்றின் நிழல் நீருக்குள்ளே 1நுடங்கினாற் போல நுடங்கிய மெல்லிய மென்மையோடே இவ்விடத்து உடலிலே கூன் 2புறப்பட்டு நடக்கின்றவளே! நின்னோடு ஒருகாரியத்தை உசாவுவேன்; அங்ஙனம் உசாவுதற்கு நீ என்ன நல்வினையைச் செய்தாய் 3காண்? இங்ஙனே நிற்பாயாகவென்றான் குறளன். எ - று.

இயலுவாய்..................நின்றீத்தை, வினைத்திரிசொல்.

5அன்னையோ, காண்டகை யில்லாக் 4குறணாழிப் போழ்தினா
(1) னாண்டலைக் கீன்ற பறழ்மகனே நீயெம்மை
வேண்டுவ லென்று விலக்கினை நின்போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று

எ - து: அதுகேட்ட கூனி, அம்மையோவென இகழ்ந்து தன் நெஞ்சிற் கூறி; கண்ணாற் பார்க்குந் தன்மையில்லாத குறளாய்ப்பிறத்தற்கு ஏதுவாகிய நாழிகையின் 5முகூர்த்தத்தே (2)ஆண்டலைப்புள்ளுக்குத் தன்பெடையீன்ற பறழாய மகனே! நீ எம்மை விரும்புவேனென்று போகாமற் றடுத்தாய்; நின்னைப் போற் குறளாயிருப்பார் பின்னை என்னைத் தீண்டப்பெறுவார்களோ வென்றாள் எ - று.


1. தலைமகன் தலைமகளாகிய இருவரும் இளமைப் பருவம் நீங்கியவழி அறத்தின்மேல் மனம்நிகழ்த்தலன்றிக் காமத்தின்மேல் மனம்நிகழ்த்தலாகிய இளமை தீர்திறப் பகுதியில், தலைமகன் இளமை தீர்திறத்திற்கு “ஆண்டலைக்கீன்ற...............மற்று” என்பதும், தலைமகள் இளமை தீர்திறத்திற்கு “உக்கத்து மேலு......................சிறிது” என்பதும் மேற்கோள்; தொல். அகத். சூ. 54. இளம்.

2. (அ) "ஆண்டலையென்பது பாழபட்டவிடத்தே வதியும் ஒரு பறவை; இடுகாட்டில் வதிவதாகப் பெரும்பாலுங்கூறப்படுகின்றது. (ஆ) இஃது “ஊண்டலை துற்றிய வாண்டலைக் குரலும்” (மணி. 6 : 77) என்பதனாலும் (இ) "ஆண்டலை யடுப்பும்” (சிலப். 15 : 211) என்பதற்கு, ‘ஆண்டலைப்புள் வடிவாகப்பண்ணிப் பறக்கவிட உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் பொறி நிரைகளும்’ என்று அடியார்க்குநல்லார் எழுதியிருக்கும் உரையாலும் தலைமூளையை ணவாகவுடையதென்றும் (ஈ) "யாமத் தீண்டிவந் தாண்டலை மாண்பிலவழைக்கும்” (நீல. தரும. 3) என்பதனால் நள்ளிரவில் கூட்டமாகவந்து கத்துமியற்கையுடைய தென்றும் தெரிகின்றது. (உ) இஃது ஆண்மகன்றலைபோன்ற தலையையும் புள்ளின் உடல்போன்ற உடலையுமுடையது; (ஊ) இஃது, இவ்விடத்தும் திருமுருகாற்றுப்படை யுரையிலும் இவரெழுதிய குறிப்பாலும். (எ) ”தூண்டருங் கணைபடத் துமிந்து துள்ளிய, தீண்டரு நெடுந்தலை.

(பிரதிபேதம்)1நுடக்கினாற், 2பிறப்பட்டு, 3தான், 4குறைநாழிப்போதி னாண்டலைக் கீண்ட, 5முகுத்தத்தே.