பக்கம் எண் :

மூன்றாவது மருதம்573

எ - து: அதுகேட்ட கூனி, ஊருகின்ற (1) யாமையை எடுத்து 1நேரேநிறுத்தினாற் போல நெடியனாய்த் (2) தோளிரண்டையும் விலாவுக்குள்ளே வீசி, யாம் நின்னை விரும்பேமென்று விலக்காநிற்கவும் எம்மை விரும்பி வருகின்ற காமனார் நடக்கும் நடையை நெஞ்சே காணாயென்றாள்; அதுகேட்ட குறளன் ஒருவரை ஒருவர் முயங்குதற்குக் காரணமான கணையினையுடைய (3) சாமனார் தமையனாகிய காமனார் நடையை நீ காணாயென நடந்து 2காட்டினான். எ - று.

35ஓஒகாண், 3நம்மு ணகுதற் றொடீஇயர் நம்முணா
4முசாவுவங்கோனடிதொட் டேன்

எ - து: அதுகேட்ட கூனி, ஓஒ! 5இவன் நடையைப் பாராயென நெஞ்சொடு கூறினாள்; அதுகேட்ட குறளன் நம்முள்ளே நாங் கூடி மகிழ்தற்கு யான் நின் மெய்யைத் தீண்டுதற்குக் குறி யிடம் 6இன்ன இன்ன இடமாமென்று நம்முள்ளே நாம் உசாவக்கடவேம்; இனி நின்னை இகழ்ந்து கூறாமைக்கு அரசன் (4) அடியைத் தொட்டுச் சூளுற்றே 7னென்றான். எ - று.

ஓஒ, இகழ்ச்சிக்குறிப்பு.


97 - 98. (இ) “காமவேள் கவர்கணை” (ஈ) “கமனா, ரைதுலாங் கவர் கணை” (உ) “அனங்க னாய்மலர்க், கவர்கணை” சூளா. நகர. 18. குமார. 5; 11. எனப் பலவிடத்தும் வருவன ஒப்புநோக்கற் பாலன. (ஊ) “கவர்வு விருப்பாகும்” என்பது தொல். உரி. சூ. 64.

1. (அ) “நீலத் தெண் ணீர் நீந்து மாமையிற், கோலக் குறுக் கை வாட் கூட்டுட் கழீஇப், பாலிகை பற்றிய குறள்வழிப் படரவும்” பெருங். (1) 46: 261 - 263. (ஆ) “கொட்டுப் பிடிபோலுங் கூனுங் குறளாமை, விட்டு நடப்பனபோற் சிந்தும்” சீவக. 2798.

2. “வீரம் படக்கையை மெய்வழி வீசித், தேரை நடப்பன போற்குறள் சிந்தினோ, டோரு நடந்தன” (சீவக. 631.) என்பதும் அதில், “கையை மெய்வழி வீசி” என்பதற்கு, ‘விலாப்புடைக்குள்ளே கையை வீசி’ என்று எழுதியிருக்கு முரையும் இங்கே அறிதற் பாலன.

3. காமனுக்குச் சாமனென்ற தம்பி யொருவனுண்டென்பதை, இந்நூற் பக்கம், 144: 3 - ஆம் குறிப்பால் அறிக.

4. (அ) "ஐய சூளி னடிதொடு குன்றொடு, வையைக்குத் தக்க மணற்சீர் சூள் கூறல்” பரி. 8: 70 - 71. (ஆ) “நி னடிதொடு கடனிது”. (இ) “குமரிநி னடிதொடு படுகட னிது” சிலப். 12: ‘சுடரொடு’ ‘துடியொடு’. (ஈ) “மதிவாண் முகத்து மணிமே கலைதனை, யொழியப் போகே னுன்னடி தொட்டேன்” மணி. 18: 170 - 171.

(பிரதிபேதம்)1நேரேநிறுத்தினாற், 2காட்டினான் ஓஒஇகழ்ச்சிக்குறிப்பு அதுகேட்ட, 3நம்முனா மாதற்றொடீஇய, 4உசாஅங் கோன், உசா அக் கோன், 5இன்னடையைப், 6 இன்னதென்னவிடமாம், 7 என்றான் ஆங்காக அசை சாயலின்.