பக்கம் எண் :

மூன்றாவது மருதம்579

இனி நின் மெய்யிற் 1புலர்வில்லாப் புண்கள், எண்ணிப்பார்க்கில் அவ்வெண்ணைக் கெடுத்தனவென்றுமாம். இனி என்றும் புதியனவாகிய பூழினது வளப்பத்தை யாழோசைபோலே பாடி அப்பூழ் பொருத்துமிடத்து விட்டு நீங்காத புலையனென்று புலையனுக்கு அடைகூறினாள். யாழோசை கேட்டாரை அகப்படுக்குமாறுபோல இவன் பாட்டும் அகப்படுத்தலின் யாழிற்பாடியென்றாள். 2பூழைத் தடவிக் கவிழ்ந்த கையினையுடைய புலையன் 3பூழ் பொருத்துமவன்; புலையன்றன்னுடைய இப்பொழுதிப்பொழுது அகப்பட்டனவாகிய பூழ், தத்தஞ் செவிகளைச் சாய்த்து இவன் கூறும் (1) மந்திர முதலியன கேட்கையினாலே அவன் தன்வசமாகத் தாழ்க்கப்பட்ட பூழ்; அப்பூழின்போரைக் கண்டாயும்போறியெனப் பூழிற்கும் ஏற்பதோர் பொருளுந்தோன்றநின்றது. இனி, யாழின் இகுத்த செவிக்கு, யாழைப்போலும் (2) மந்திரத்தாற் றாழ்ந்த செவியென்பாருமுளர்.

14 (3) ஊரவர் கவ்வை யுளைந்தீயா யல்கனின்
றாரின்வாய்க்கொண்டு முயங்கிப் பிடிமாண்டு
போர்வாய்ப்பக்காணினும் போகாது 4கொண்டாடும்
பார்வைப்போர்கண்டாயும் போறிநின் றோண்மேலா
மீரமாய்விட்டன புண்.

எ - து: ஊரிலுள்ளார் கூறும் அலருக்கு வருந்தாயாய்த் தங்குதலையுடைய நின் மார்பிற் றாரிடத்தே கையாலே அணைத்துக்கொண்டு தழுவி அகப்படுத்துதலாலே மாட்சிமைப்பட்டு வேறுஞ் சிலரை அகப்படுத்திக் கொண்டு 5வருதற்குப் பார்வையாகப் போகவிட்ட மகளிராலே உண்டான ஊடற்போரை வாய்ப்பக் 6கண்டாராகிலும் அதற்கு ஊடிப்போகாதே உன்னைக் கைக்கொண்டு நுகருங் கலவிப்போரைக் கண்டாயும்போலே இருந்தாய்; நின் தோளிற் புண்களெல்லாம் புலராமல் ஈரமாயே கிடந்தனவென்றாள். எ - று.

இனி, ஊரிலுள்ளார்எக்காலமும்பூழ்பொருந்தி 7திரிவையென்று கூறும் ஆரவாரத்திற்கு வருந்தாயாய் மார்பிலே அணைத்துக்கொண்டு முயங்கித்


1. “சொல்லுஞ் சுவட்டவர் சொல்லுக சொல்லுங்காற், சொல்லும் பலவுள சொன்னபின் - வெல்லும்..................பூழ்” என்பதும் ‘சொல்லக்கடவ மந்திரம் பலவாவன: தீற்றும் அரிசி ஓது மந்திரமும,் பச்சிலை பிசைந்து தடவும்போது சொல்லு மந்திரமும், செவியுள்ளுறுத்து மந்திரமும்' என்று எழுதியிருக்கும் அதன் விசேடவுரையும் ஈண்டு அறிதற்பாலன; பு-வெ. பெருந்திணை. வென்றிப். 9.

2. “மந்திரங் கேட்குஞ் செவிய போல” பெருங். (4) 3: 87.

3. “ஊரவர் கௌவை” குறள். 1147.

(பிரதிபேதம்)1புலர்விலபுண்கள், 2அப்பூழைத்தடவி, 3பூழ்ப்பொருத்து, 4கொண்டோடும் 5வருத்தற்குப்பார்வை, 6கண்டார்களாகிலும், 7திரிவரென்று.