பக்கம் எண் :

608கலித்தொகை

யாலே உலகத்திற்குத் தரும்படியாக வாய்த்த இழையணிந்த கொடியினை யுடைத்தாகிய திண்ணியதேரினையும் (1) மணிகட்டின இனமாகிய யானையினையு முடையாய்! எ - று.

ஊழ் ஊழியெனத் திரிந்தது.
8 (2)அறனிழ லெனக்கொண்டா 1யாய்குடை யக்குடைப்
புற 2நிழற்கீழ்ப் பட்டாளோ விவளிவட் 3காண்டிகா
பிறைநுதல் பசப்பூரப் பெருவிதுப் புற்றாளை

எ - து: 4நின் அழகிய குடையினது நிழல் அறத்தைச் செய்யுமென்று எடுத்தாய்; அந்தக்குடையினது நிழலின்புறத்தே இவளகப்பட்டாளோ? அதிற் பட்டவளல்லள்; இங்ஙனம் பிறைபோலும் நுதல் பசப்புப் பரப்பப் பெரிய (3) நடுக்கமுற்ற இவளை இவ்விடத்தே அருளிப்பாராய். எ - று.

5காண்டியென்னும் முன்னிலைவினையோடு (4) காவென்னும் அசைநிலை யிடைச்சொல் நின்றது.


1. "மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா" இன்னா. 14.

2. (அ) "வெண்குடை, நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற, வேம முரச மிழுமென முழங்க, நேமி யுய்த்த.....................கவுரியர் மருக", புறம். 3 : 1 - 5. என்பதும் (ஆ) "மன்னுயிர் காக்குமிம் மன்னனுமென் கொலோ, வின்னுயி, ரன்னானைக் காட்டி யெனைத்தொன்று, மென்னுயிர் காவா தது" கலி. 143 : 53 - 5.
(இ) "மண் காவல் கொண்ட வடிநெடு வேன்முடி மன்னவர்க்குப், பெண்காவல் கொள்கை பெரும்பழி போலும் பெருந்தகையே" அம்பிகாபதி. 520. என்பவையும் (ஈ) "முன்னமே மொழிந்தா யன்றே யிவன்குறை முடிப்ப தையபின்னிவன் வினையின் செய்கை யதனையும் பிழைக்க லாமோ" கம்ப. வாலிவதை. 127. (உ) "வானும் வையமுங் காத்து வரம்பிலா, வூனு மாவியு மோம்பிய மாயற்கு, மீனும் வேலும் வெருவருங் கண்ணியும், யானுமோபிற ரென்றுளங்கன்றுமால்" திருக்கழுக்குன்ற. நாராயணச். 14. என இதனிழலாய் வருவனவும் இங்கே அறிதற்பாலன.

3. விதுப்பென்பதற்கு, புறநானூற் றுரையாசிரியரும் நடுக்க மென்றே பொருள் கூறினர். இவர்கள்கொள்கை, இச்சொல் விதிர்ப்பின் மரூஉ வென்பதுபோலும்; விதும்பலென்பதற்கு விரைதலென்று பொருள் கூறுவர் பரிமேலழகர்.

4. காவென்னுமிடைச்சொல் அசைநிலையாய்வருதற்கு "அறனிழ................... ..........காண்டிகா" என்பது நன். இடை சூ. 22. மயிலை. விருத்தி.

(பிரதிபேதம்)1நின்குடையக், 2நிழற்பட்டாளோ, 3கண்டிகா, 4நின்குடையினது, 5கண்டி.