தலைமையினையுடைய மனமசைந்த இயல்பினையுடையளாகிய துரோபதையது துய்ய கூந்தலிலே கையை நீட்டிய 1துச்சாசனனுடையநெஞ்சைப் பிளந்து போகட்டுப் பகைவர்நடுவே தான்சொன்ன வஞ்சினத்தை வாய்க்கச்செய்த வீமசேனனைப்போலும். எ - று. போலும் போன்மெனத் திரிந்தது. 2"னகாரை முன்னர் மகாரங் குறுகும்" (1) என்பதனான் மகரங் கான்மாத்திரையாய் நின்றது. புன்குருக்கண், ஆகுபெயர். சாவக்குத்தியென்பது "சாவ வென்னுஞ் 3செயவெ னெச்சத் திறுதி வகரங் கெடுதலு முரித்தே" (2) என்பதனால் வகரங்கெட்டது. 21 | (3) சுடர்விரிந் தன்ன சுரிநெற்றிக் காரி விடரியங் கண்ணிப் பொதுவனைச் சாடிக் குடர்சொரியக் குத்திக் குலைப்பதன் றோற்றங்காண் படரணி யந்திப் பசுங்கட் கடவு ளிடரிய (4) வேற்றெருமை நெஞ்சிடந் திட்டுக் குடர் 4கூளிக் கார்த்துவான் போன்ம்
|
புகாதுறு முலண்ட, மாக்கியிடு கூடதனை யாத்திடுதல் போல" (இ) "குடம்பையுளுலண்டுபோலக்கோட்படும்வினையன்" (ஈ) "வாலுலண்டு கோற்றருத, றேன்புரிந்தி யார்க்குஞ் செயலாகா" (உ) "அரக்குலண்டு செந்தே னணிமயிற்பீலி, திருத்தகு நாவியோடைந்து" (ஊ) "நூலினு முலண்டினு நாரினு மியன்றன" என்பவற்றால் அறியப்படுகின்றன; இங்கே அதனிறம் புற்கென்றநிறமென்று சொல்லப்படுகிறது. இவ்வகை ஆராய்ச்சியால் இது பட்டுப்பூச்சி யென்பது விளங்கும். 1. தொல். மொழிமரபு. சூ. 19. 2. சாவ வென்னும் எச்சத்து இறுதிக்கணின்ற வகரஉயிர்மெய் கெட்டு நிற்றற்கு, "கோட்டிடைச் சாக்குத்தினான்" என்பது (தொல். உயிர் மயங்கு. சூ. 7. நச்; இ - வி. சூ. 85) இவற்றிலும், 'சாக்குத்தினான்' என்பது (தொல். உயிர்மயங்கு. சூ. 7. இளம். நன். உயிரீற்று. சூ. 19. மயிலை. விருத்தி. இரா); இவற்றிலும் மேற்கோளாகக் காணப்படுகின்றன. 'சாக்குத்தினான்' என்பதனை முதனிலைவினை வினைமாத்திரையாய் நில்லாது வினையெச்சப் பொருட்டாய் நின்றதென்பர் பிரயோக விவேக நூலார். பிரயோக. 35. 3. "வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோலத், தெள்ளிதின் விளங்குஞ் சுரிநெற்றிக் காரியும்" கலி. 105 : 9 - 10. 4. (அ) "ஏற்றெருமைநெஞ்சம் வடிம்பினிடந்திட்டு" கலி. 103 : 42. எனவும் (ஆ) "ஏற்றெருமை யுகைத்தடரு மிருணிறத்த வெரிகுஞ்சிக், (பிரதிபேதம்)1துச்சுவாசனுடைய, 2 'னகர முன்னர் மகரங்குறுகும்', 3செய்தெனெச்சத் திறுதி, 4கூளிக் காத்துவான்.
|