பக்கம் எண் :

நான்காவது முல்லை625

நேர்வெள்ளையென்க. நுதியென்றது முனை; எனவே, தலை யென்பது தோன்றிற்று. 1"நுதிக்கோலஞ்செய்து" (1) என்றாற்போல.

எனவாங்கு அசை.

இங்ஙனம் தோழி காட்டக்கண்டு நங்கணவற்கும் இங்ஙன மாகுமோ வென்று அஞ்சின தலைவியது அச்சத்தை ஆண்டுப்பெற்ற நன்னிமித்தங்கண்டு தோழி 2போக்குவாளாக மேற்கூறுகின்றாள்.

34அணிமாலைக் கேள்வற் றரூஉமா (2) 3ராயர்
மணிமாலை யூதுங் குழல்

யென்றிருக்கவேண்டியதென்று தோற்றுகிறது. வியாஸபாரதத்தில் அசுவத்தாமா திட்டத்துய்மனை அவனுறங்குகையில் காலாலுதைத்து நிலத்தில்தேய்த்துத் தன்வில்லின் நாண்கயிற்றினால் அவன் கழுத்தைக் கட்டி இழுத்து அவனை மிதித்து வருத்தாநிற்க, அவன் வலியற்று, 'குரவன் காதலா! யான் புண்ணிய வுலகடையுமாறு என்னைப் படைக் கலத்தால் விரைந்து கொல்' என்று வேண்டவும், 'குரவனைக்கொன்ற பாவிகட்கு நல்லுலகங்கள்கிடையா; ஆதலால் நீ படைக்கலத்தால் கொல்லத் தக்காயல்லை' என்று மறுத்து மீட்டும் தன்கால்களால் உயிர் நிலைகளில் உதைத்துக் கொன்றான்" என்று காணப்படுஞ் செய்தியும் பின்பு, "வீடுமனைக்கொன்ற சிகண்டி எதிர்த்துப் புருவங்களுக்கிடையே வில்லால் அடிக்க, அவனைக் கத்தியால் இருதுணியாகத் துணித்தானென்று காணப்படுஞ் செய்தியும் இங்கே அறிதற்பாலன. வில்லிபுத்தூரரும்,
"பருவரலகற்றி யிருவர்வீரரையும் பாசறை வாயிலினிறுத்தி, மருவருங் கமல மாலையான்கடப்ப மாலையானெனமனங் களித்துப், பொருவரு முனைக்குக் குரிசிலா யெல்லாப் போரினும் புறமிடா தடர்த்த,
துருபதன் மதலை வரிசிலைத் திட்டத் துய்மனை மணித்தலை துணித்தான்", "கயில்புரி கழற்காற் றந்தையைச் செற்ற காளையைப் பாளையத் திடையே, துயில்புரி யமையத் திமைக்குமுன் சென்னி துணித்தனன் சுதனெனக் கலங்கி, வெயில்புரி வதன்முன் வல்லிரு ளிடையே யுணர்ந்தவர் வெருவுட னரற்றப், பயில்புரி சிலைக்கைச் சிகண்டியை முதலோர் பலரும்வந் தனர்கள்பாஞ் சாலர்", "உத்தமோ சாவு முதாமனு முதலிட் டுள்ளவர் யாவரும் பிறருந், தத்தமோ கையினால் வந்தெதிர் மலைந்தோர் தலைகளாற் பலமலையாக்கி" என்று கூறியிருக்கிறார்; வில்லி. பதினெட்டாம். 213 - 215.

1. கோவையார். 260.

2. "அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன், குழல்போலுங் கொல்லும் படை" குறள். 1228.

(பிரதிபேதம்)1 நுதிக்கோலஞ் செய்ததென்றாற்போல, 2போக்கினாளாக மேற்கூறுக, அணிமாலைக், 3ஆயன்.