பக்கம் எண் :

நான்காவது முல்லை631

போல்வனபிறவும் பூத்த பலமலர்கள் நெருங்கும்படி (1) தழையும் கோதையும் இழையுமென்று சொல்லுகின்ற இவற்றைக் கட்டினராய் அணிந்துமகிழ்ந்து திளைத்து விளையாடும், மடப்பத்தையுடைத்தாகிய மொழியினையுடைய, ஆயத்தாருள்ளே 1இன்று உடம்போடே என்னுயிர்க்குள்ளே புக்கவளாகிய இவள் யார்தானென்றான் தலைவன். எ - று.

இழை, பூண்வடிவாகக் கட்டினது.

9

2ஓஒ இவள், (2) 3பொருபுக னல்லேறு கொள்பவ ரல்லாற்
றிருமாமெய் தீண்டல ரென்று கருமமா
வெல்லாருங் கேட்ப வறைந்தறைந் 4தெப்பொழுதுஞ்
சொல்லாற் றரப்பட் டவள்

எ - து: அதுகேட்ட பாங்கன், 5ஓஒவென வியந்து இவள் பொருகின்ற 6புகற்சியையுடையநல்ல ஏற்றைத் தழுவுமவரல்லது அழகினையுடைய மாந்தளிர் போலும் 7நிறத்தையுடைய மெய்யைச் சேராரென்று எல்லாருங் கேட்டிருப்ப இதுகாரியமாகப் பலகாலுஞ் சாற்றிச் சாற்றி எப்பொழுதுஞ் சொல்லிய சொல்லாலே 8அடிப்படக் கொண்டுவரப்பட்டவளென்றான். எ - று.

13 சொல்லுக

எ - து: அது கேட்ட தலைவன், அச்சுற்றத்தைநோக்கி இவன் ஏறுதழுவி இவளைக் கொள்வனென்று அவர்க்குக் கூறுகவென்றான். எ - று.

பாணியே மென்றா ரறைகென்றார் பாரித்தார்
மாணிழை யாறாகச் சாறு


1. தழை, பலவகையான தளிர் அரும்பு பூ முதலியவற்றாற் செய்து ஓரங்களை ஒழுங்காகக் கத்தரித்து இளைய மகளிர் உடுக்கும் உடை விசேடம்; "முடித்த குல்லை யிலையுடை நறும்பூச், செங்கான் மராஅத்த வாலிணரிடையிடுபு, சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை, திருந்துகாழல்கு றிளைப்ப வுடீஇ" முருகு. 201 - 204. "அளிய தாமே சிறுவெள் ளாம்ப, லிளைய மாகத் தழையா யினவே", "அணித்தழை நுடங்க வோடி மணிப்பொறிக், குரலங் குன்றி கொள்ளு மிளையோள்", "அம்பூந் தொடலை யணித்தழை யல்குற், செம்பொறிச் சிலம்பி னிளையோள்" புறம். 248 : 1 - 2, 340 : 1 - 2, 341 : 2 - 3. என வருதல் காண்க.

2. "கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும், புல்லாளே யாய மகள்" கலி. 103 : 62 - 63.

(பிரதிபேதம்)1நின்றுடம்போடே, 2ஒஒவிவள், 3பொருபுகழினல்லேறு, பொருபுகழ் நல்லேறு, 4எப்போதும், 5ஓவெனவியந்து, 6புகழ்ச்சியை, 7நிறத்தினையுடைய, 8படிபடக்.