பக்கம் எண் :

நான்காவது முல்லை659

வெருவரு (1) தூம மெடுப்ப வெகுண்டு
திரிதருங் கொல்களிறும் போன்ம்

எ - து : பலரும் எழுந்திருந்து சென்று அதிர்ந்து அதிர்ந்து கெட்டு அவ்விடத்தைக் கடந்து சேர நீங்கும்படியாக 1எலும்பு முறிந்து குடர்களற்றுக் கவிழும்படி குத்திவிட்ட பின்பு தன் கொம்பின் 2வலியழியத் தழுவினவனை அலைத்துக்கொண்டு திரிந்து துகைக்குங் குறையாத கோபத்தினையுடைய அழகினையுடைய ஏறு வெருவுதல் வருதற்குக் காரணமான மருந்தினாற் புகைக்க அதற்கு வெகுண்டு திரிதருங் கொல்கின்ற களிற்றையும் ஒக்கும்; இஃதொன்றைப் பாராயென்றாள். எ - று.

45



(2)
தாளெழு துணிபிணி யிசை 3தவிர் பின்றித் தலைச்சென்று
தோள்வலி துணிபிணி துறந்திறந் தெய்தி மெய்சாய்ந்து
கோள்வழுக்கித் தன்முன்னர் வீழ்ந்தான்மேற் செல்லாது
மீளும் புகரேற்றுத் தோற்றங்காண் மண்டமருள்
வாளகப் பட்டானை யொவ்வா னெனப்பெயரு
மீளி மறவனும் போன்ம்


1. தூமெடுத்தலால் களிறு வெகுளுமென்பது உதயணன் சரித்திரத்து, யூகி பிரச்சோதனன் நகரைக்கலக்குதற்கு யானைக்குத் தூமமூட்டிய செய்தியைக்கூறும் ''ஆனைதன் னிலைகண் டெய்தியகிலிடும் புகையுமூட்டிச், சேனைமன் னகர ழித்துச் சிறைவீடுன் கடனே யென்று, மானநல் யூகி யானைச் செவியின்மந்திரத்தைச் செப்ப, யானைதன் மதக்கம் பத்தி லருந்தளை யுதறிற்றன்றே'' என்னும் (உதயணகுமார (1) உஞ்சைக்காண்டம். 85 - ஆம்) செய்யுளாலும் அறியலாகும்.

2. (அ) ''வடுவாழ் மார்பி, னம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது, தும்பை சூடாது மலைந்த மாட்சி யன்னார் பெரும'' (ஆ) ''ஒன்னார் மெலிவிடத்தும்..........................செல்லாமை தான்றலையே'' (இ) ''மங்கை மகிழ வுறையேனேல் வாளமருட், பங்கப்பட் டார்மேற் படை நினைந்தே னாகென்றான்'' (ஈ) ''கைப்படை யொன்று மின்றிக் கைகொட்டிக் குமர னார்ப்ப, மெய்ப்படை வீழ்த்த நாணி வேழமு மெறிதல் செல்லான், மைப்படை நெடுங்கண்மாலை மகளிர்தம் வனப்பிற்சூழ்ந்து, கைப்படு பொருளிலாதான் காமம்போற் காளைமீண்டான்''
(உ) ''கைத் துயிர் குடிப்ப னென்னா வெற்றினா னிடதுகையான், மெய்த்தலைச் சூலமோச்சான் வெறுங்கையா னென்று வெள்கி'' (ஊ) ''சென்றவன் றன்னைநோக்கிச் சிரித்துநீ சிறியை யுன்னை, வென்றவ மும்மை யெல்லாம் விளிப்பெனோ'' (எ) ''எனக் காற்ற லார்மேன், மாகால் வரிவெஞ்சிலையோடும் வளைத்த போது, சேகாகும்'' என்பவை, ஈண்டு அறிதற்பாலன.

(பிரதிபேதம்)1எலும்பு மெலும்பு முறிந்து, 2வலிகெடத் தழுவினவனை, 3தவிர்வின்றி.