பக்கம் எண் :

674கலித்தொகை

எ - து: நடுவே பாயந்தெய்திக் கழுத்திடத்தே தழுவிக்கொண்டு கிடந்த வனோடே பரணின்மேலே தாவிப்பாயும் வெள்ளிய ஏறு பாம்பின்வாயாற் சிறிதிடம் விழுங்கப்பட்டு அப்பாம்புடனே ஒளியைத்தருகின்ற விசும்பிலே போதலைச்செய்கின்ற, பால்போலும் மதியையும்போலும்; இதனைக்காணா யென்றாள். எ - று.

(1) 1இகா முன்னிலையசை. அது காவெனத் திரிந்தது.
47ஆங்க, ஏறும் பொதுவரு மாறுற்று 2மாறா
விருபெரு வேந்தரு மிகலிக்கண் ணுற்ற
பொருகளம் போலுந் தொழூஉ

எ - து: அங்ஙனே ஏறுகளும் இடையரும் தம்மின் மாறுபடுகையினாலே அத்தொழு இருவராகிய பெரியவேந்தர் மாறுபட்டு எதிர்ப்பட்ட போர்மாறாத பொருகளத்தையொக்கும் என்றாள். எ - று.

இத்துணையும், தோழி தலைவிக்குக்காட்டிக் 3கூறியது.

50வெல்புக ழுயர்நிலைத் தொல்லியற் றுதைபுதை துளங்கிமி
னல்லேறு கொண்ட பொதுவன் முகனோக்கிப்
பாடில வாயமகள் கண்

எ - து: நெருங்கின கழுத்தையெல்லாம் மறைத்தலையுடைய அசைகின்ற குட்டேற்றினையுடைய 4நல்ல ஏற்றைத்தழுவின, வெல்கின்ற புகழ் உயர்கின்ற நிலைமையையுடைய, பழைதாகிய குலத்தியல்பினையுடைய, பொதுவன் முகத்தை நோக்கி ஆய்ச்சாதியிற்பிறந்த மகளுடைய கண் இமைத்தலை 5யிலவாயிருந்தன. எ - று.

இது, தோழி தன் னெஞ்சோடே அவள் விரும்பக் கூறியது.


1. "நில்லிகா வென்பாள்போ னெய்தற் றொடுத்தாளே, மல்லிகா மாலைவளாய்" என்புழி, நில்லிகா வென்பாள் போல் என்பதற்கு நில்லென்பாள் போல் என்று பொருள்கூறி, 'இகவென்னும் அசை இகாவென வீறு திரிந்தது' என்று (பரிபாடல். 11 : 104 - 105) பரிமேலழகரும் காணிகா வென்பதற்குக் காண்பாயாக வென்று பொருள்கூறி, 'இகவென்னும் முன்னிலையசை இகாவென ஈறு திரிந்தது' என்று (சிலப். 18 : 46) அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் எழுதியிருப்பதை நோக்க இங்கும் 'இக, முன்னிலையசை; அது இகாவெனத் திரிந்தது' என்று இருக்கவேண்டுமென்று தோற்றுகிறது.

(பிரதிபேதம்)1 இதுமுன்னிலையசை, 2மாறாவிருபெரு, 3கூறினாள வெல்புகழ், 4வல்லேற்றை, 5 இல்லவாயிருந்தனவெனத் தோழி தன்னுள்ளேயவள்விரும்பக்கூறினாள், நறுநுதலாய்.