பக்கம் எண் :

698கலித்தொகை

31(1)புனத்துளா னெந்தைக்குப் (2) புகாவுய்த்துக் கொடுப்பதோ
வினத்துளா 1னென்னைக்குக் கலத்தொடு செல்வதோ
தினைக்காலுள் 2யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ

எ - து: அந்நாளிலே மோர்விற்று மீள்கின்ற நீ செம்முல்லை நெருங்கின தோர் கானத்திடத்துச் 3சிறிய யாற்றினயலிடத்தே (3) 4இளையமாவடுவைப் பிளந்தாலொத்த கண்ணாலே எனக்கு உரித்தாகிய என்னெஞ்சைநினக்கு இருப்பிடமாக வாங்கிக்கொண்டு அடிமைத் தொழில்கொண்டாய்; ஒரு கள்வியை யல்லையோ? அது நீயறியாயோ என்றான்; அது கேட்டவள், நின் னெஞ்சை எனக்கு இருப்பிடமாக 5வாங்கிக் கொண்டு யாம் அடிமைத் தொழில் கொள்ளுதல் எமக்கு எங்ஙனம் எளிதாயிருக்கும்? நின்னெஞ்சு புனத்திடத்தானாகிய (4) என்தமையனுக்கு உணவைக்கொண்டு சென்று கொடுக்குமதொன்றோ ? பசுத்திரளிடத்தானாகிய என் தந்தைக்குக்கறவைக்கலங்கொண்டு 6செல்லுமதொன்றோ? தினை அரிந்த 7தாளிடத்தே யாய் மேயவிட்ட கன்று மேய்க்குமதொன்றோ? அன்றே ! ஆதலால் அரிதேகாணென்றாள். எ - று.

34 அனைத்தாக

எ - து : அதுகேட்டவன், இனி நீ ஏவின தொழில்களை என்னெஞ்சு செய்வதொன்றாக என்றான். எ - று.


1. தலைவி வினைவல பாங்கின ளென்பதற்கு “புனத்துளா................. மேய்க்கிற்பதோ” என்பதை, (தொல். அகத். சூ. 23.) மேற்கோள் காட்டி, இஃது ‘எமரேவலான் யாம் செய்வதன்றி யாங்களேவ நின்னெஞ்சம் இத்தொழில்கள் செய்கின்றனவில்லை யென்றலின், வினைவல பாங்கினாளாய தலைவி கூற்றாயிற்று’ என விளக்கினர். நச்.

2. புகா - உணவு ; தொல். கள. சூ. 16 : 6. அற. 119, 122.

3. (அ) "வடுவிடை போழ்ந்தகன்ற கண்ணாய்” கார். 6. (ஆ) ”வடுப்போழ்ந் தன்ன வாளரிநெடுங்கண்”
(இ) ”வடிப்போழ்ந் தன்ன வாளரித் தடங்கண்” பெருங். (1) 46 : 223; (2) 4: 12. என்பவையும் கலி. 64 : 21 - ஆம் அடியும் அதன் குறிப்பும் ஒப்புநோக்கற்பாலன.

4. என்னை யென்பதற்கு என் தமையனென்ற பொருளும் எந்தை யென்பதற்கு என் தகப்பனென்ற பொருளுமே காணப்படுவதனால், இங்கே ஏதோ ஒரு முறைபற்றி அச்சொற்களை மாற்றி இயைத்தாரென்று தோற்றுகிறது. அன்றி எந்தையென்பதற்கு என் தமையனென்ற பொருளு முண்டெனின் பிரதிபேதத்தால் ஆற்றொழுக்காகவே பொருள் அமையும்.

(பிரதிபேதம்)1எந்தைக்கு, 2யாம்விட்ட, 3சிற்றாற்றய, சிற்றியாற்றய, 4இளமாவடுவை, 5வாங்கிக்கொண்டு அடிமைத், 6செல்லுவதொன்றோ, 7தரளிடத்தேயா யா மேயவிட்ட.