குடைநிழ (1) 1லாண்டாற்கு மாளிய வருவாற்கு மிடைநின்ற காலம்போ லிறுத்தந்த மருண்மாலை எ - து : (2)பகைவரிடத்துப் போர்த்தொழில்நிகழ்த்த வல்ல விளங்கிய ஒழுக்கத்தாலே வெல்கின்ற புகழையுடைய அரசன் நல்ல தருமநூனெறி யாலே(3) பல்லுயிர்களையும் பாதுகாத்துத் தீவினையால் உளதான நடுக்கம் மனத்திலில்லையாம்படி தான்செய்த பழவினையின்பயனை நுகர்தற்குச் சுவர்க்கத்தை விரும்பிப் போனாற்போல பலகதிரையுடைய (4) ஞாயிறு தனக்குப் பகையாகிய இருளைக் கெடுத்து உலகத்திற்குப் பகற்பொழுதை முறைமையாற் செலுத்தி மலையிலே சென்று சேராநிற்க, அமையாதே கலக்கங்கொண்ட உலகத்தினிடத்தே பின்னை 2அவ்வரசனுக்குப் பகைவனாகிய அரசன் வந்து அவ்வுலகைச் சிறிதே அளிப்பான்போல, தனக்கு மாறுபாட்டையுடைய இருளை மதி போக்காநிற்க, அந்தக்குடையால் நிழல்செய்து ஆண்ட அரசனுக்கும் அவ்வுலகை ஆளவரும் அரசனுக்கும் நடுவுநின்ற வருத்தந்தருகின்ற காலம்போல வந்துவிட்ட மாலாய்! நீ மருட்சியையுடைய மாலையாய் இருந்தாயென்றாள். எ - று. 9 மாலைநீ, (4) 3தூவறத் துறந்தாரை நினைத்தலிற் கயம்பூத்த போதுபோற் குவிந்தவென் னெழினல மெள்ளுவா
1. ‘’புற்கென்றா ரந்தி புனைமலர்க்க ணீரரும்ப, நிற்கின்ற தந்தோ நிலங்காப்பான் - முற்கொண், டடைகின்ற வேந்தர்க்கு மாண்டஞ்சி னோர்க்கு, மிடைநின்ற காலம்போ லின்று’’ நள. சுயம்வர. 100. 2. ‘’விரியிருட் பகையை யோட்டித் திசைகளை வென்று மேனின் றொருதனித் திகிரியுந்தி யுயர்புகழ் நிறுவி நாளு, மிருநிலத்தெவர்க்கு முள்ளத் திருந்தன னென்ன வீந்த, செருவலி வீர னென்னச் செங்கதிர்ச் செல்வன் சென்றான்’’ கம்ப. கங்கைப். 47. 3. ‘’மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப, தன்னுயி ரஞ்சும் விளை’’ குறள். 244. 4. (அ) ‘’விரிகதிர்பரப்பி..............மல்லன் மூதூர் மாலைவந் திறுத்தென..............அந்திவானத்து வெண்பிறை தோன்றிப், புன்கண்மாலைக் குறும் பெறிந்தோட்டி’’ சிலப். 4 : 1 - 20. 5. (அ) “இனந்தூய்மை தூவா வரும்” (குறள். 455.) என்பதன் விசேட வுரையில், தூவென்பது பற்றுக்கோடென்னும் பொருளில் வருதற்கு, ‘தூவறத் துறந்தாரை’ என்பதனை மேற்கோள் காட்டுவர், பரி. தாவென்பதேயன்றித் தூவென்பதும் வலியென்னும் பொருளில் வருமென்பதை, (ஆ) “தூவறுத்தலின்” மது. 188. (இ) “தூவெதிர்ந்து” பதிற். 81 : 34. (ஈ) “தூவாகாது” (உ) “தூவறத் துறந்தனன்” (ஊ) “தூவற நீப்ப” கலி. 67 : 20, 129 : 9, 146 : 19. (பிரதிபேதம்)1ஆண்டோற்கும், ஆண்டார்க்கும், 2அரசனுடபகைவனாகிய, 3தாவற.
|