பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்757

தோற்றஞ்சால் செக்கருட் (1) பிறைநுதி யெயிறாக
நாற்றிசையு நடுக்குறூஉ மடங்கற் காலைக்
கூற்றுநக் கதுபோலு முட்குவரு கடுமாலை

எ - து: (2) அருள் ஒருகாலத்தும் இல்லையான அறிவாலே (3) அறஞ் செய்தல் இருமைக்கும் பயன்றருமென்று கருதானாய், பண்புஞ்செய்யானாய், எல்லாரும்வெருவுதலுறும்படி தனக்குள்ளநாளைப் பயன்படாமற்செலுத்தினவ னுடைய நெஞ்சின் மருட்சிபோலே, மெத்தென மெத்தென இருளாலே உலகம் நிறைந்து கணவரைப் பிரிந்தோர்க்குத் தனிமைமேலிடும்படி செறிந்த சுடரையுடைய ஞாயிறு 1அத்தகிரியைச்சேர மிடியாலே இரத்தற்கஞ்சினவன் வலியின்றகைமை கெட்டுச்சென்று ஒருவனை வேண்டுகின்றவனுடையநெஞ்சு போலே, மரமெல்லாம் முதற் பொலிவழிந்து, பின்பு அம்மரமெல்லாம் இரப்பாரைக்கூண்டுஇருந்தவிடத்தினின்றும் எழுந்திருந்துபோய் மறைகின்றவனெஞ்சு கண்ணோடாதுகுவியுமாறுபோல, இலைகளெல்லாங் குவிய வருகின்றமாலாய்! நீதான் நாலுதிக்குஞ் சேர நடு கமுறும் ஊழிமுடிவாகிய காலத்திலே கூற்றுவன் விளக்கம் அமைந்த செக்கயவானிடத்துத் தோன்றின நுதியையுடைய பிறை தனக்கு எயிறாகக் கொண்டு (4) பல்லுயிரையுஞ் சேரக்கோடற்கு நக்காற்போலும் உட்சூதலையுடைய கடியமாலையா யிருந்தாய். எ - று. 


1. (அ) "ஒன்றேயெயிற்ற தொருபெரும்பே யுலகம் விழுங்க வங்காந்து, நின்றாற்போல நிழலுமிழ்ந்து நெடுவெண்டிங்க ளெயிறிலங்க, வின்றே குருதி வானவா யங்காந் தென்னை விழுங்குவா, னன்றே வந்ததிம்மாலை யளியே னாவி யாதாங்கொல்" சீவக. 1660. (ஆ) "விரி மலர்த் தென்றலாம் வீசுபாசமு, மெரிநிறச் செக்கரு மிருளுங் காட்டலா, லரியவட் கனறரு மந்தி மாலையாங், கருநிறச் செம் மயிர்க் காலன் றோன்றினான்" கம்ப. மிதிலைக்காட்சிப். 92. (இ) "கூற்றங் கரந்து கொடியபுன் மாலை வடிவுகொண்டு, தோற்றுஞ் சிறு பிறை யேயெயி றாகத் துறையிருந்து, தேற்றந் தரும்பெடை யன்ன முஞ் சேவலுஞ் சேக்கைபுகு, மாற்றுந் திறமறி யேனவ ரோசென் றகன்றனரே" அம்பிகாபதிகோவை. 164.

2. (அ) "மெல்லெ, னருளிற் பிறக்கு மறநெறி" நான்மணி. 7. (ஆ) "அறனு, மருளுடையான் கண்ணதே யாகும்" சிறுபஞ்ச. 3.

3. (அ) "தருமமென் றொருபொரு ளுளது தாவிலா, விருமையி னின்பமு மெளித னாக்குமால்" கந்த.............................. (ஆ) "அறமே, யிருமை யுந்துணை யாகுவ தன்றிமற் றில்லை"

4. (அ) "மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையு, நின்னொடு தூக்கிய" புறம். 19 : 3 - 4. (ஆ) எருமைக் கடும்பரி யூர்வோ னுயிர்த் தொகை, யொருபக லெல்லையி னுண்ணு மென்ப, தாரிய வரச

(பிரதிபேதம்)1அத்தமசிரியை.