மிஞிறு சிறிதே ஒலித்து மிக ஆரவாரிப்பக் 1கரிய தும்பிகள் தம்மில் இயைந்து தேனையூதச் 2சூழ்ந்துகிடக்கும் விளங்குகின்ற நீரையுடையசேர்ப்பனே! எ - று. கடலினது புலானாற்றமாகிய தீங்கினைப் பூக்களின்மணம் போக்கினவதனை அக்கடல் அறியாதிருக்கின்ற சேர்ப்பனென்றதனான், நின்வருத்தத்தைத் தீர்க்க 3வேண்டுமென்று கருதி அவள் நின்னிடத்தே வந்து தீர்த்த நிலையை நீயறிந்திலையென மேல்வருகின்ற தாழிசைப் பொருளையுள்ளுறுத்து உள்ளுறையுவமந் தந்தவாறுகாண்க. 6 | கொடுங்கழி வளைஇய குன்றுபோல் வாலெக்கர் (1) நடுங்குநோய் தீரநின் குறிவாய்த்தா ளென்பதோ கடும்பனி யறலிகு கயலேர்கண் பனிமல்க விடும்பையோ டினைபேங்க பிவளைநீ துறந்ததை |
எ - து: முன்னர்க் கடியதாகிய நீர் பின்னர்ச் சுவறுதலின் அறுதியையுடைத்தாய் விழுகின்ற, கயலையொத்த கண் நீரற்று (2) மல்குகின்ற அளவாய் நிற்க, வருத்தத்தோடே கெட்டு அழும்படி இவளை நீ துறந்தது, நின் மனம் நடுங்குதற்குக் காரணமாகிய காமநோய் தீரும்படியாகச் சுறவு முதலியனவற்றையுடைமையாற் 4கொடிய கழிகள் சூழ்ந்த மலைபோல் உயர்ந்த வெண்மையையுடைய இடுமணலிடத்து நீ செய்த குறியிடத்தே தப்பாமல் வந்தாளென்பதோ? எ - று. என்பதோ என்றது என்று சொல்லப்படுவதோவென்னும் பொருடந்து நில்லாது வாய்த்தாளென்னுஞ் சொல்லுணர்த்திய செய்ந்நன்றியைத் தானும் உணர்த்திப் பிரிவிலசைநிலையாய் நின்றது. இஃது “ஆக வாக லென்ப
றண் சேர்ப்ப” (உ) “பொன்னடர்ந் தன்ன வொள்ளிணர்ச் செருந்தி” (ஊ) “பருதியஞ் செல்வன்போ லிணரூழ்த்த செருந்தியும்” (எ) “அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்” (ஏ) “தலைநாட் செருந்தி தமனிய மருட்டவும்” (ஐ) “செருந்தி, காலை யேகன கம்மலர் கின்ற சாய்க் காடே” (ஒ) “பொன்னியன்ற, தட்டலர்ந்த பூஞ்செருந்தி” என்பவற்றால் செருந்தி நெய்தற்குரித்தாதலும் அதன் பூவினியல்பு முதலியனவும் அறியப்படும். 1. “நடுங்குநோய் செய்தவர் நல்காமை நினைத்தலிற், கடும்பனிகைமிகக் கையாற்று ளாழ்ந்தாங்கே, நடுங்குநோ யுழந்தவென் னலனழிய மணனோக்கி, யிடும்பைநோய்க் கிகுவன போலுமஃதெவன்கொலோ” கலி. 134 : 15 - 18. 2. “கண்ணிறை நெடுநீர் கரந்தன ளடக்கி” என்பதும் அதனுரையும் இங்கே அறிதற்பாலன. சிலப். 13 : 173; அடியார்க்கு. (பிரதிபேதம்) 1கரியதாகிய, 2சூழ்ந்துகிடக்குமென்க, கடலினது, 3வேணுமென்று கருதியவனிடத்தே, 4கொடியதாகிய.
|