| வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத் (1) தலையுற முன்னடிப் 1பணிவான் போலவும் |
எ - து: என்னை மறத்தலேயன்றிப் பின்னர் அவசத்தான் முலையிடையிற் றுயிலுயும் மறந்தாயென்றுகூறிப் பழைய (2) தன்மைகெட்ட நெஞ்சத்தையுடையேன் அழுவேன்போலேயும், அதுகண்டு (3) வலையிலே அகப்பட்ட மயில்போல காவலிலே அகப்பட்டுப் பெரிதும் வருந்தினாயேயென்று கூறி அடிமுன்னே தன் தலையுறும்படி வணங்குவான் போலேயும். எ - று.
1. (அ) “முன்னடிப் பணிந்தெம்மை யுணர்த்திய வருதிமன்” கலி. 73 : 15. என்பதும் அதன் குறிப்பும் (ஆ) “பொய்ப்ப விடேஎ மென நெருங்கிற் றப்பினே, னென்றடி சேர்தலு முண்டு” கலி. 19 : 14 - 15. (இ) “சிற்றடிப் போது புல்லித் திருமகன் கிடப்ப” சீவக. 2508. (ஈ) “தோடவிழ்தார் யானுந் தொடர வவனுமென், பாடகச் சீறடியின் மேற்பணிய - நாடகமா, வைகிய கங்கு றலைவரி, னுய்குவெனுலகத் தளியேன் யானே” பு. வெ. கைக்கிளை. பெண்பாற். 10. (உ) “நெய்யுண் சுரிகுழ னேரிழை யாய்நென்ன னீளிரவின், மையுண்குவளை மலிபுன லூரன் மலர்க்கமலக், கையுந் தலையுமென் காலுமொன் றான கனவுதன்னை, மெய்யென் றருவினை யேன்விழித்தேனென் விழியிமையே” (ஊ) “கதந்தணியத், தொடர்ந்தகலாத துணையடித்தாமரை சூடவள்ளல்” (எ) "ஊர வணங்கியநின், முடிவைத்த செங்கையு மென்முலையாக முயங்கவந்தென், னடிவைத்த செங்கையு மெங்கையர்காணி னறவுநன்றே" (ஏ) “எண்போன நெஞ்சமு நீருமென் பாத மிறைஞ்சுதனுங், கண்போலு மெங்கையர்காணினன்றோ” (ஐ) “அளகையன்னீ, ரெல்லாக் குறையும் பொறும்பணிந் தேனும் மிணையடியே” (ஒ) “பேராட்டி யின்றென் பிழையை யெண்ணிச், சீறேலுன் சீறடி பற்றினன் யான்” (ஓ) “பிழையைக் கருதிடலுன், சரணஞ் சரண மடியேற் கருளுன் றலையளியே” (ஒள) “நூபுரஞ்சேர், சீறடி மேல்விழுந் தேன்றவிர் வாயிந்தச் சீற்றத்தையே” (ஃ) “எங்கால் பிடிக்கின்ற தெங்கையர் காணி ணியல்பலவே” (அஅ) “ஊரன் மலரடி வீழ்ந்து” (ஆஆ) “இளம்பிடி பஞ்சடி தொட்டவன்றே, கஞ்சமுத் தீன்றன” (இஇ) “சிறுத் தொண்டனென்னக், காலை முடித்தனை யெங்கையர் காணி்ற் கலங்குவரே” என்பவைகளும் ஈண்டு அறிதற் பாலன. 2. நிலை - தன்மை; “நிலையொன்று பாடுதும்யாம்” என்பது சிலப். 24. 3. (அ) “ஓரி முருங்கப் பீலிசாய, நன்மயில் வலைப்பட் டாங்கியா, முயங்குதொறு முயங்கு மறனில் யாயே” குறுந். 244. (ஆ) “வலைப்படு மஞ்ஞையி னலஞ்செல” குறிஞ்சி. 250. (இ) “வலையிடைப்பட்ட (பிரதிபேதம்) 1பணிப்பான் போலவும்
|