பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்817

அத்துறைவன்நம்பாற் செய்தகொடுமையை நினைத்துத் தோழீ! நம்முன் தாம்நிற்றற்கு நாணினவோ? தோழீ! நம்முன் தாம் நிற்றற்கு நாணினவோ? எங்ஙனம் நாணினவாயின், தோழீ! இராக்காலமெல்லாம் நாணிக்கிடந்தனவாய் இருக்குமென இயற்பழித்தாள். எ - று.

துறையிடத்து அலவனென்பவை என்க. ளஎன்பவை, தொழிற்பெயர்.

21 (2) மாரிவீ ழிருங்கூந்தன் (3) மதைஇயநோக் கெழி லுண்கட்
டாழ்நீர முத்தின் றகையேய்க்கு முறுவலாய்
தேயாநோய் (4)செய்தான் றிறங்கிளந்து நாம்பாடுஞ்
சேயுய ரூசற்சீர் நீயொன்று (5)பாடித்தை

எ - து. அது கேட்ட தலைவி பாடாமையிற் பின்னும் தோழி, மழை விரும்புகின்ற பெரிய கூந்தலையும் மதர்த்த நோக்கினது அழகையுடைய 1கண்ணினையும் தாழ்ந்த கடலிற் பிறந்த முத்தினது அழகை ஒக்கும் முறுவலினையுமுடையாய்! மாயாத நோயைச் செய்தவனுடைய கொடுமையின் கூற்றினைச் சொல்லி நாம் பாடும் மிக உயர்ந்த ஊசற்பாட்டை நீ ஒன்றுபாடுவாயென்றாள். எ - று.

(6)சீர் என்றது, தாள அறுதியையுடைய ஊசற்பாட்டை..


1. ‘‘வாணிலாநகை மாதராள்செயல் கண்டுமைந்தர்மு னிற்சவு, நாணினாளென வேகினாணளிர் கங்குலாகிய நங்கையே’’ கம்ப. கைகே. 46.

2. ‘‘மாரிவீ ழிருங்கூந்தல்’’ (கலி. 14: 4) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

3. (அ) ‘‘பேரமர் மழைக்*கட் கொடிச்சி, ( *கண் மடந்தை, என்றும் பிரதிபேதம்) மூரன் மறுவலொடு மதைஇய நோக்கே’’ குறந். 286. (ஆ) ‘‘மாதர் வாண்முக மதைஇய நோக்கே’’ அகம். 130: 14. (இ) ‘‘மாதர் வாண்முகத்து மதைஇய நோக்கமொடு’’ சிலப். 8 : 76.

4. ‘‘கோதையுங் குழைவின் பட்டின் கொய்சகத் தலையுந் தாழ மாதர் வண் டொருங்கு பேர மழையிடை நுடங்கு மின்போற், போதலர் பொதும்பிற் றாழ்ந்த பொன்னெழி லூச றன்மே, லோதநீர் வண்ணற்பாடி யூழினூ ழியங்கு வாரும்’’ சூளா. சுயம்வர. 86.

5. ‘‘பாடித்தை’’ (கலி. 40 : 10) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

6. ‘சீரென்பதற்கு, ‘தாள முடிந்துவிடுங்காலத்தினைத் தன்னிடத்தே கொண்ட சீர்’ என (கலி. 1 : 7) இவ்வுரையாசிரியர் விளக்கியிருப்பதும் இந்நூற்பக்கம் 10 : 1-ஆம் குறிப்பும் இங்கே அறிதற்பாலன.

(பிரதிபேதம்)1கண்ணிமையுமுடைய தாழ்ந்த.