எ - து. என்று யான் வல்லே சொல்லக்1கேட்டாயாயின், அழகு விளங்குகின்ற நெடிய மலையை வருத்தும் நின்மார்பிடத்தே மாணிக்கம் 2விளங்குகின்ற முத்துவடம் பூமாலையோடு அசைதலுண்டாக அணிந்து வருந்தினளாய் நெட்டுயிர்ப்புக்கொள்ளும் என்றோழிபொருட்டு ஓடுகின்ற ஒலியினையுடைய நெடிதாகிய தேரை விரைந்து செலுத்துவாயென வரைவுகடாயினாள். எ - று. ‘‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக், காதன்மிகுதி யுளப்படப் பிறவு, நாடு மூரு மில்லுங் குடியும், பிறப்புஞ் சிறப்பு மிறப்பு நோக்கி, யவன் வயிற் றோன்றிய கிளவியொடு தொகைஇ, யனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்’’ (1) என்பதனிற் சிறப்பு என்பதனால் ஒழுக்கமும் வாய்மையும் புகழும் [பிறப்புங்] கூறி வரைவுகடாயினாள். இதனால், தலைவற்கு அசைவு தோன்றிற்று. இஃது ஒத்தாழிசைக்கலி. (18) (136). | இவர்திமி லெறிதிரை யீண்டிவந் தலைத்தக்கா லுவறுநீ ருயரெக்க ரலவனா டளைவரித் தவலிறண் கழகத்துத் தவிராது வட்டிப்பக் கவறுற்ற வடுவேய்க்குங் காமர்பூங் கடற்சேர்ப்ப; | 5 | முத்துறழ் மணலெக்க ரளித்தக்கான் முன்னாயம் பத்துருவம்பெற்றவன் மனம்போல நந்தியா ளத்திறத்து நீநீங்க வணிவாடி யவ்வாயம் வித்தத்தாற் றோற்றான்போல் வெய்துய ருழப்பவோ; | 9 | முடத்தாழை முடுக்கரு ளளித்தக்கால் வித்தாய மிடைத்தங்கக் கண்டவன் மனம்போல நந்தியாள் கொடைத்தக்காய் நீயாயி னெறியில்லாக் கதியோடி யுடைப்பொதி யிழந்தான்போ லுறுதுய ருழப்பவோ; |
1. தொல். கள. சூ. 23, இச்சூத்திரப்பகுதியி னுரையில், ‘‘கடிமலர்ப்.......புகராகிக் கிடவாதோ’’ என்னும் பகுதிகளை மேற்கோள்காட்டி, ஒழுக்கமும் வாய்மையும் புகழும் இறப்பக்கூறியனவென்று நச்சினார்க்கினியரும் குடிமையும்வாய்மையும் புகழுமாகிய சிறப்புப்பற்றி வந்தனவென்று இளம்பூரணரும் நாற்கவி. சூ. 166. உரையில் இவற்றை மேற்கோள்காட்டி, மரபும் புகழும் வாய்மையுங் கூறியன வென்று நாற்கவிராசநம்பியும் எழுதியிருக்கிறார்கள். (பிரதிபேதம்)1கேட்டாயாயி னனி அழகு, 2விளங்கும் முத்துவடம்.
|