பக்கம் எண் :

856கலித்தொகை

இது (1) மடலூர்ந்து தலைவியைஎய்திய தலைவன் தான் மடலூர்ந்த வாறும் அவளை எய்தியவாறும் தனக்குப் பாங்காயினார்க்குக் கூறியது.

இதன் பொருள்

(2) எழின்மருப் பெழில்வேழ மிகுதரு கடாத்தாற்
றொழின்மாறித் தலைவைத்த தோட்டிகை நிமிர்ந்தாங்
கறிவுநம் மறிவாய்ந்த வடக்கமு நாணொடு
வறிதாகப் பிறரென்னை நகுபவு நகுபுடன்
(3) மின்னவிர் நுடக்கமுங் கனவும்போன் மெய்காட்டி
யென்னெஞ்ச மென்னோடு நில்லாமை நனிவௌவித்
தன்னலங் கரந்தாளைத் தலைப்படுமா 1றெவன்கொலோ
(4)மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை
யணிப்பூளை (5)யாவிரை யெருக்கொடு பிணித்தியாத்து

1. புணர்ந்தபின் நிகழ்வதாகிய பெருந்திணைக் குறிப்புள் தலைமகற்கே யுரித்தாகிய ஏறிய மடற்றிறத்துக்கு இச்செய்யுள்மேற்கோள்; தொல். அகத். சூ. 54. இளம். சூ. 13. நச்.

2. ‘‘நெய்தற்றிணையோடு பெருந்திணையும் மயங்கி வந்ததற்கு ‘‘எழின் மருப் பெழில்வேழம்.......கேட்டீமினென்று’’ என்னும் பகுதி மேற்கோள்; இ-வி. சூ. 395.

3. ‘‘துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி, யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென், னெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டுந் துஞ்சே, னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின் பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப, வோங்கிரும் பெண்ணை மடலூர்ந்தென் னெவ்வநோய், தாங்குத றோற்றா விடும்பைக் குயிர்ப்பாகவீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது, பாடுவேன் பாய்மா நிறுத்து’’ கலி. 139 : 5 - 13. 

4. (அ) ‘‘மணிநிற வுருவின தோகையும்’’ (ஆ) ‘‘மரகதக் கதிர்தழைத்த கலாப மஞ்ஞை’’

5. (அ) ‘‘குனிகா யெருக்கின் குவிமுகிழ்விண்டலொடு, பனிவா ராவிரைப் பன்மலர் சேர்த்தித், தாருங் கண்ணியுந் தைஇத் தன்னிட, மீளு மடலோன் வரவென் கொல்லென, நீர்த்துறைப் பெண்டிர் நெஞ்சழிந்திரங்கு........., றணிமடற் கலிமா மன்றத் தேறித்தன், னணிநலம் பாடினு மறியாள்’’ குணநாற்பது. (ஆ) ‘‘மறவல் வாழிதோழி துறைவர், கடல்புரை பெருங்கிளை நாப்பண், மடல்புனைந் தேறிநிற் பாடும்பொழுதே’’ தொல். கள. சூ. 23. மேற்.

(பிரதிபேதம்)1எவன்கொல்லோ.