அஃதியாதெனின், ஒருத்தி மயங்கினமழைக்கு நடுவில் மின்போலே வந்துதோன்றித் தன்னொளியோடே தன்னுருவையும் என்னைக் காணப்பண்ணி என்னை அளிக்குந்தன்மையளாய் அளித்துப் 1பின்னர் என்னெஞ்சைத் தான்வரும்வழியாகக் கொண்டுவிட்டாள்; அதனை முதலாகக்கொண்டு துயில்கொள்ளேனாய் அசைகின்ற அழகினையுடைய (1) ஆவிரையினது பூவோடே எருக்கினது கட்டுதலையுடைய அழகினையுடைய கண்ணியையுஞ் சூடி வளருங் கரிய பனைமடலாற் செய்த குதிரையை மணிகள் ஆரவாரிப்ப ஏறி அப்பாய்மாவை (2) மனத்தே நிறுத்தி யான் நீங்காமனின்று வருத்தத்தைத் தருகின்ற என் காமநோயைத் தாங்கமாட்டாமையால் உண்டான 2மனவருத்தத்திற்கு இளைப்பாறுதலாக இறுகின பூணினையுடைய மாதர் என்னை வருத்தின கூற்றிலே ஒரு கூற்றினைப் (3) பாடுவேன்; அதனை இவ்விடத்திருந்த சான்றீர்! கேளுமென்றான். எ - று. பலராதலிற் சான்றீர் சான்றீரென்றான். ஈர் என்று விளியேலாது (4) குறுகிநின்றது. ஓ, அசை, பின்பு சான்றீர் என்றது தான் பின்பு கூறுகின்றதற்கு எதிர்முகமாக. 3கொண்டும் என்னும் உம்மை இசைநிறை. 4‘‘ஒருத்தி யொளியோடுரு....... துஞ்சேன்’’ என்றது (5) தன்கட்டோன்றிய அசைவுபற்றி அவலம் பிறந்தது. 14 (6) யாமத்து மெல்லையு மெவ்வத் திரையலைப்ப | (7) 5மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன் |
1. இந்நூற்பக்கம் 857 : 7-ஆம் குறிப்புப் பார்க்க. 2. (அ) ‘‘மன்றத்து மடலேறி, நிறுக்குவென் போல்வல்யா னீடு பழியே’’ கலி. 58 : 22 - 23. (ஆ) ‘‘மடற் கலிமா மன்றத் தேறித்தன், னணிநலம் பாடினு மறியாள்’’ குண. என்பவற்றை நோக்க, ‘மனத்தே’ என்பது ‘மன்றத்தே’ என்று இருக்கவேண்டியதென்று தோற்றுகிறது. 3. இந்நூற்பக்கம் 858 : 3-ஆம் குறிப்பில் (ஆ) முதலியவை பார்க்க. 4. ‘அர்’ ஈராய் விளியேற்கும்; தொல். விளி. சூ. 21. 5. இச்செய்திக்கே ‘‘துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி..... துஞ்சேன்’’ என்னும் அடிகள் மேற்கோள்; தொல். மெய்ப். சூ, 5; நச்; இ - வி. சூ 578. 6. ‘‘யாமத்து மெல்லையும்’’ என்னும் பகுதி (தொல். அகத். சூ. 54. நச்) சுட்டி ஒருவர் பெயர்கொள்ளாப் பெருந்திணைக்கும் ‘‘காம மேநுகர் வார்தம காதலால், யாம மும்பக லும்மறி யாமையால்’’ (சீவக. 135.) என்புழி யாமம் இரவென்னும் பொருளில் வருமென்பதற்கும் மேற். 7. ‘‘மாமேலேனென்று........பட்டு’’ என வருதலின் இச்செய்யுள் எறியமடற்றிறமான பெருந்திணையென்பர் நச்சினார்க்கினியர்; தொல். அகத். சூ. 13, சூ. 51. இ-வி. நூலாரும் இச்செய்யுளை அதற்கே மேற்கோள் காட்டினர்; இ-வி. சூ. 591. (பிரதிபேதம்)1பின்னர் நெஞ்சை, 2மனம் வருத்த, 3கொண்டும்: உம்மை, 4ஒத்தி, 5மாமேவி நின்று.
|