பக்கம் எண் :

882கலித்தொகை

24  (1) கோடுவாய் கூடாப் பிறையைப் 1பிறிதொன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே
யாடையான் (2) 2மூஉ யகப்படுப்பேன் சூடிய
காணான் றிரிதருங் கொல்லோ மணிமிடற்று
3மாண்மலர்க் (3) கொன்றை யவன்;
29 தெள்ளியே மென்றுரைத்துத் தேரா தொருநிலையே
வள்ளியை யாகென நெஞ்சை வலியுறீஇ
யுள்ளி வருகுவர் 4கொல்லோ வுளைந்தியா
னெள்ளி யிருக்குவேன் மற்கொலோ 5நள்ளிருண்
மாந்தர் கடிகொண்ட கங்குற் (4) கனவினாற்
றோன்றின னாகத் (5) தொடுத்தேன்மன் 6யான்றன்னைப்
(6) பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய
கையுளே மாய்ந்தான் கரந்து;

1. (அ) ‘‘கோடுவாய் கூடாப்............கொன்றையவன்’’ என்னும் பகுதியைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளுட் கலக்கமென்பது மனங்கலங்கி நிற்கு நிலையென்று கூறி அதற்கு மேற்கோள்காட்டினர், இளம். தொல். மெய்ப். சூ. 22. (ஆ) ‘‘கோடு கூடு மதியம்’’ பதிற். 31 : 12. (இ) ‘‘கோடுகொ ளொண்மதியை’’ கள. 22. (ஈ) ‘‘திங்கட் செல்வன், பைங்கதிர்க் கோடு கூடும் பக்கத்தில்’’ உத்தாகோச. நள. 35.

2. ‘‘எங்கு, மூயிலங்கி யிறையவனார் முடிமிசைமல் கியகோயில்’’ திருவானைக்கா. கெசாரணிய. 26.

3. (அ) ‘‘கொன்றை யலங்கலந் தெரியலான்’’ கலி. 150 : 1. (ஆ) ‘‘கொன்றை வேய்ந்த செல்வன்’’ (இ) ‘‘பிரணவத்திற் குரியபொருள் பிறரென்று பேசிடுவோர், முரணவித்தற் காகமங்கண் முதலாய வேண்டுபவோ, கரணவிகற் பங்கடந்தோய் காவதமெண் ணிலகமழுந், திரண்மிகுத்த செழுங்கொன்றை மாலிகைசேர் தரக்கண்டும்’’

4. (அ) ‘‘நனவின் வாரா நயனி லாளனைக், கனவிற்கண்டியான் செய்தது கேளினி..........தொடுப்பேன் போலவும்’’ (கலி. 128 : 8 - 11) என்பதும் (ஆ) ‘‘தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற.....................அறனில்லவன்’’
(கலி. 144 : 55 - 58) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

5. ‘‘தொடுத்தல்’’ இந்நூற்பக்கம் 794 : 2-ஆம் குறிப்பில் (இ) (ஈ) பார்க்க.

6. கலக்கமென்னு மெய்ப்பாட்டிற்கு, ‘‘பையெனக் காண்கு........கரந்து’’ என்னும் அடிகள் மேற்கோள்; தொல். மெய்ப். சூ. 22. நச்.

(பிரதிபேதம்)1பிறிதென்று, 2மூடியகப், 3மாண்மாலைக்கொன்றை, 4கொல்லோ வளைந்தியான், 5நல்லிருள், 6யான்றளைஇப்.