பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்901

(1) சிலைவல்லான் போலுஞ் செறிவினா னல்ல
பலவல்லன் றோளாள் பவன்
36 நினையு (2) மென் னுள்ளம்போ னெடுங்கழி மலர்கூம்ப
வினையுமென் (3) னெஞ்சம்போ லினங்காப்பார் குழறோன்றச்
சாயவென் (4) கிளவிபோற் செவ்வழியா ழிசைநிற்பப்
போயவென் னொளியேபோ லொருநிலையே பகன்மாயக்
(5) காலன்போல் வந்த கலக்கத்தோ டென்றலை
மாலையும் வந்தன் றினி.
42  இருளொடியா னீங்குழப்ப வென்னின்றிப் பட்டா
யருளிலை வாழி சுடர்

1. (அ) ‘‘அரிவையை யரம்பை நாண வணிந்தன னனங்க னன்னான்’’ (சீவக. 674) என்புழி, ‘அனங்க னன்னான்’ என்பதற்கு, ‘இவளைத் தீண்டவும் வேட்கை நிகழாமையின் அனங்க னன்னான் என்றார்’ என்று விசேடவுரை கூறி, ‘‘சிலைவல்லான் போலுஞ் செறிவினான்’’ என்பதனைமேற்கோள்காட்டினர் இவ்வுரையாசிரியர். (ஆ) ‘‘வில்லாண்மையினால் வெண்கருப்பு வில்லோன்றனக்கே நிகரென்ன’’ வில்லி. திரௌபதிமாலையிட்ட. 46. (இ) ‘‘வேயெனத் தகைய தோளி யிராகவன் மேனி நோக்கித், தீயெனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டா, னாயெனத் தகுதுமன்றே காமனு நாமு மெல்லாம்’’ கம்ப. கும்ப. 30. (ஈ) “திருமலி கருப்புவென்றிச் சிலையினா லுலகமெல்லாம், பொருதுசெங் கோன டாத்திப் புகழ்விளை யேக வீரன்’’ எனவும் (உ) ‘‘காமனும் விழையுங் காமர் காரிகைக், கலையுணர் மகளிர்’’ பெருங். (1) 40 : 183 - 184. (ஊ) ‘‘காமனும்.........காமுறு மொப்பில் வனப்பினாள்’’ திருவிளை. மாபாதகந். 3. எனவும் வருவன நோக்குக.

2. ‘‘இம்மாலை, இருங்கழி மாமலர் கூம்ப வரோவென், னரும்படர்நெஞ்ச மழிவொடு கூம்பும்’’ கலி. 130 : 11 - 13. 

3. ‘‘இம்மாலை, கோவலர் தீங்குழ லினைய வரோவென், பூவெழி லுண்கண் புலம்புகொண் டினையும்’’ கலி. 130 : 14 - 16.

4. (அ) ‘‘செவ்வழியாழ் நரம்பன்ன கிளவியார்’’ கலி. 118 : 15; (ஆ) ‘‘செவ்வழி நல்யா, ழிசையோர்த் தன்ன வீன்றீங் கிளவி, யணங்குசா லரிவையை’’ அகம். 212 : 6 - 8. 

5. ‘‘பிறைநுதி யெயிறாக, நாற்றிசையு நடுக்குறூஉ மடங்கற் காலைக், கூற்றுநக் கதுபோலு முட்குவரு கடுமாலை’’ (கலி. 120 : 7 - 9) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.