பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்911

(1) திங்களுட் 1டோன்றி யிருந்த குறுமுயா
லெங்கே ளிதனகத் 2துள்வழிக் காட்டீமோ
காட்டீயா யாயிற் கதநாய் கொளுவுவேன்
வேட்டுவ ருள்வழிச் செப்புவே னாட்டி 
மதியொடு பாம்பு மடுப்பேன் மதிதிரிந்த 
வென்னல்ல றீரா யெனின்
24 என்றாங்கே, உண்ணின்ற வெவ்வ முரைப்ப மதியொடு
வெண்மழை யோடிப் புகுதி சிறிதென்னைக் 
கண்ணோடி னாய்போறி நீ

எ - து: அங்ஙனங் கூறி, அந்திக்காலத்தே கையறவெய்தி உரைத்தவள் இனி 3இக்காலத்துத் தன்னாற்றேடுதல் அரிதென்று கருதி, திங்களைக் கண்டு இதனோடு செறிந்த முயல் தேடித் தருமெனக் கருதி, மிக்கு எழுகின்ற கரிதாகிய கடல்சூழ்ந்த உலகமெல்லாம் பார்த்துக் திங்களினுள்ளே விளங்கி இருந்த குறிய முயலே! அறிவு வேறுபட்ட என்னுடைய நெஞ்சை யான் தேடிக் கூட்டிக் கொள்ளக் கருதின வருத்தத்தை நீ அதனைக் கூட்டித் தீராயாயின் யான் வாங்கிக் கொள்ளும்படி இவ்வுலகத்தில் எங்கேள்வன் இருக்கின்ற இடத்தைக் காட்டுவாய்; அவனிருக்கின்ற இடத்தைக் காட்டாயாயின், நினக்குப் பகையாகிய கோபத்தையுடைய நாயை நின்னிடத்தே கொளுத்துவேன்; அதுவன்றி வேட்டுவருள்ள இடத்தேசென்று ஒருமுயல் உண்டென்று கூறுவேன்; அதுவேயன்றி நீ அரணாக உறைகின்ற திங்களோடே நின்னை அலைத்து விழுங்கும்படி மதிக்குப் பகையாகிய பாம்பைச்செலுத்துவேனென்று அவ்வந்திக்காலஞ் செல்கின்ற காலத்தே தன்னெஞ்சினின்ற வருத்தத்தைச் சொல்ல, அது வெண்மேகத்தே 


என்னும் அடிகளை ஞாயிறுமுதல் நெஞ்சீறாக் கூறியவையேயன்றி, பிறவும் கூறுவனபோலவுங் கேட்பனபோலவும் கூறுமா றமையுமென்பதற்கு மேற்கோள் காட்டினா; தொல். செய். சூ. 200.

1. (அ) முயல் என்பது முயால் என விளியேற்றதற்கு, “திங்களுட்டோன்றி யிருந்த குறுமுயால்” என்பது மேற்கோள்; தொல். விளி மரபு. சூ, 34. நச். இ - வி. சூ. 214. (ஆ) இந்திரன் புத்தன் மேலுள்ள அன்பினாற் சந்திரமண்டிலத்து முயல்பொறித்தானென்பதுபவுத்தநூற்றுணிபு. (இ) “குடைப்புறந் துஞ்சு மிகல - னிடைப்பொ லிந்த, திங்களிற் றோன்றும் குறுமுயல்போற் செம்பியன், செங்கண் சிவந்த களத்து” கள. (ஈ) “குறுமுய லொளிக்கு மரணினை, யிரவிரு ளகற்று நிலவினை” சிலப். 6: 37. உரை மேற்கோள். (உ) “நிலவு பொழியு முயற்கூடு” உத்தரகோசு. பாயிரம். 25.

(பிரதிபேதம்)1தோன்றவிருந்த, 2உள்வழி காட்டீமோ, காட்டிலையாயின், 3இக்காலத்தென்னாற்.