பக்கம் எண் :

914கலித்தொகை

புறங்காலிற் போக விறைப்னே் 1முயலி
(1) னறம்புணை யாகலு முண்டு
49 துறந்தானை, நாடித் தருகிற்பா யாயி னினக்கொன்று
பாடுவே 2னென்னோ யுரைத்து
51  (2) புல்லிய கேளிர் புணரும் பொழுதுணரே
3னெல்லியா கெல்லையென் றாங்கே பகன் 4முனிவ
னெல்லிய காலை யிரா 5முனிவன் யானுற்ற
வல்லல் களைவா ரிலேன்
55  ஒஒகடலே, தெற்றெனக் (3)கண்ணுள்ளேதோன்றவிமையெடுத்துப்
பற்றுவே னென்றியான் விழிக்குங்கான் மற்றுமென்
னெஞ்சத்து ளோடி யொளித்தாங்கே துஞ்சாநோய்
செய்யு (4) மறனில் லவன்
59  ஒஒகடலே, (5) ஊர்தலைக் கொண்டு கனலுங் கடுந்தீயு
ணீர்பெய்தக் காலே சினந்தணியு மற்றிஃதோ

இ - வி. நூலாரும் அவ்வாறே கூறினர். தலைவியின் கலக்கங் கூறுதற்கு, "பிறங்கிரு முந்நீர்....................விறைப்பேன்" என்பதனை (சீவக. 998 உரையில்) மேற்கோள்காட்டினர் இவ்வுரையாசிரியரும்.

1. (அ) அறநெறியே வெற்றிக்கு முதலென்றும் (ஆ) அறம் பொருந்தாத முயற்சி பயன்படாது தொலையுமென்றும் (இ) அறந்தலை நின்றார்க்கழிவில்லை யென்றும் (ஈ) அறம் வெல்லும் பாவந்தோற்கு மென்றும் (உ) அறத்தினாலன்றி வெல்லலரி தென்றும் பெரியோர் கூறுவன இங்கே அறிதற்பாலன.

2. அழிவில் கூட்டத்திற்குரிய பொருள்களுள் பொழுது மறுப்பாதலென் பதற்கு, "புல்லிய கேளிர்.............களைவா ரிலேன்" என்னும் பகுதி மேற்கோள்; தொல். மெய்ப். சூ. 24. 'தெய்வமஞ்சல்' இளம்.

3. (அ) “கனவினாற், றோன்றின னாகத் தொடுத்தேன்மன் யான்றன்னைப், பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய, கையுளே மாய்ந்தான் கரந்து” கலி. 142: 33 - 36. (ஆ) “துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கா, னெஞ்சத்த ராவர் விரைந்து” குறள். 1218.

4. (அ) “அறனிலி” (ஆ) “அறனில்லா வன்பிலி” கலி. 42: 4, 86: 33 - 34.

5. (அ) “ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு, நீருட் குளித்து முயலாகு நீருட், குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி, யொளிப்பினுங் காமஞ்

(பிரதிபேதம்)1முயலில், 2என்னோவுரைத்து, 3அல்லியாகெல்லை, 4முனிவேன்.