பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்931

36 யானுற்ற வெவ்வ முரைய்பிற் பலர்த்துயிற்றும்
யாமநீ துஞ்சலை மன்;
38 எதிர்கொள்ளு ஞாலத் துயிலாரா தாங்கண்
முதிர்பென்மேன் முற்றிய வெந்நோ யுரைப்பிற்
கதிர்கண் மழுங்கி மதியு மதிர்வதுபோ
லோடிச் சுழல்வது மன்;
42 பேரூர் ம.றுகிற் பெருந்துயிற் சான்றீரே 
நீரைச் செறுத்து நிறைவுற வோம்புமின்
கார்தலைக் கொண்டு பொழியினுந் தீர்வது
போலாதென் மெய்க்கனலு நோய்;
46 இருப்பினு நெஞ்சங் கனலுஞ் செலினே
வருத்துறும் யாக்கை வருந்துத லாற்றே
னருப்ட முடைத்தென்னு ளெவ்வம் பொருத்திப்
பொறிசெய் புனைபாவை போல வறிதுயங்கிச்
செல்வேன் விழும முழந்து; 
51 எனவாங்குப் பாட வருளுற்று;
வறங்கூர் வானத்து வள்ளுறைக் கலமரும்
புள்ளிற் கதுபொழிந் தாங்கு மற்றுத்தன்
னல்லெழின் மார்பன் முயங்கலி
னல்ல றீர்ந்தன் றாயிழை பண்பே.

(1) இதுவுமது. இதற்கும் (2) முன்னங் கூறிய உரையைக் கூறக்கொள்க.

இதன் பொருள்.

உரைசெல வுயர்ந்தோங்கிச் சேர்ந்தாரை யொருநிலையே
வரைநில்லா விழுமமுறீஇ நடுக்குரைத்துத் தெறன்மாலை
யரைசினு மன்பின்றாங் காமம் புரைதீர
(3) வன்னமென் சேக்கையு ளாரா தளித்தவன்


1. இச்செய்யுளும் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமாகிய பெருந் திணைக்கு மேற்கோள்; தொல். அகத். சூ. 13. நச்.

2. இந்நூற்பக்கம் 885 - 886. பார்க்க.

3. (அ) "தூவி யன்னமென் சேக்கையுள்’’ (கலி. 13 : 15) என்பதும் (ஆ) "இணைபட..................துணைபுண ரன்னத்தின் றூவிமெல் லணை’’ (கலி. 72 : 1 - 2) என்பதும் (இ) அதன் குறிப்பும் இங்கே அறிதற்பாலன.