உண்கண் நீர்நிறைகையினாலே அந்நீர் தன் குவிந்த முலைமேலே வடியாநிற்க அவனைத் தேடுவதோர்கூற்றிலே நின்று மனம் சுழலாநிற்கும்; இனி யாம் இவளிடத்தே சென்று இவள் கூறுவனவற்றைக் கேளாது 1இருப்பேமோ? கேட்கக்கடவேமென்று நும்மிலே கூறி என்னிடத்தே வந்து எல்லிழாயென்று என்னை விளித்து, பிரியேன் என்று பிரிதலை வரைந்தவனைப் பிரியானெனத் துணிந்து அவன் பிரிதலின் நாணையும் மறந்தாள் என்று கூறி எனக்கு அன்புற்றீர்போல நீ என்னுற்றனை என்று வினவுகின்றவர்களே! பின்னை இவ்வருத்தத்தை எல்லீருங் கேட்பீராக என்று கூறுகின்றவள், (1) எனக்குச் சிறந்த வன் என்வலியறும்படி என்னைக் கைவிடுகையினாலே பெருகிவந்து என் மேல் நிலைபெற்ற இக் காமநோய், கோடை (2) உலகத்தைச் சுடும்படியாகப் (3) பெய்யாமற்போன மேகம் வருத்துமாற்றையும்போலும்; பெருகி என்னுயிரைப் (4) போக்குவதோர் நீர் வெள்ளம் வருத்துமாற்றையும் போலும்; என்றுகூறினாள். எ - று. 18 | நக்கு நலனு மிழந்தா ளிவளென்னுந் தக்கவிர் போலு மிழந்திலேன் மன்னோ 2மிக்கவென் னாணு நலனுமென் னுள்ளமு மக்கா லவனுழை யாங்கே யொழிந்தன (5) வுக்கா ணிஃதோ வுடம்புயிர்க் கூற்றாகச் (6) செக்கரம் புள்ளித் திகிரி யலவனொடியா னக்கது 3பன்மா ணினைந்து |
1. “சிறந்தானை வழிபடீஇ” (கலி. 9: 23) என்பதும் அதன் உரையும் அதன் குறிப்பும் பார்க்க 2. (அ) “வானந், துளிமாறு பொழுதினிவ் வுலகம் போலுநின், னளிமாறு பொழுதினிவ் வாயிழை கவினே” (கலி. 25 : 27 - 29) என்பதும், (ஆ) அதன் குறிப்பும் (இ) “விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத், துண்ணின் றுடற்றும் பசி” (குறள். 13.) என்பதும் நோக்குக. 3. (அ) “கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும்...............எல்லாவுயிர்க்கு மில்லால் வாழ்க்கை” புறம். 203 : 1 - 3; (ஆ) “பெயற்பான் மழைபெய்யாக் கண்ணும்.............. என்னையுலகுய்யுமாறு” நாலடி. 97. 4. (அ) “நீர்மிகிற் சிறையு மில்லை” புறம். 51 : 1; (ஆ) “நீர்மிகி னில்லை சிறை” பழ. 190; (இ) “சிறையு முண்டோ செழுமபுனன் மிக்குழீஇ” மணி. 5: 19; (ஈ) “சிறையென்ப தில்லை செவ்வே செம்புனல் பெருகுமாயின்” சூளா. கல்யாண. 155. 5. இந்நூற்பக்கம் 538: 5-ஆம் குறிப்பும் “இவ்விருந்த சான்றீர்” கலி. 139 : 3 - 4 என்பதும் இங்கே அறிதற்பாலன. 6. “சொக்கர் ஞெண்டின்” அகம். 20 : 4. (பிரதிபேதம்)1இருப்போமோ, 2மிக்கவே நாணும், 3பன்மானினைந்து.
|