18 | கலைஇய கண்புருவந் தோணுசுப் பேஎர் சிலைமழைபோ றாழ்ந்திருண்ட கூந்த லவற்றை விலைவள மாற வறியா தொருவன் வலையகப் பட்ட தென் னெஞ்சு | 22 | வாழிய கேளிர் | 23 | பலவுஞ்சூ டேற்றித் தெளித்தவ னென்னை முலையிடை வாங்கி முயங்கின னீத்த (1) கொலைவனைக் காணேன்கொல் யான் | 26 | காணினு மென்னை யறிதிர் கதிர்பற்றி யாங்கெதிர் நோக்குவன் (2) ஞாயிறே யெங்கேள்வன் யாங்குள னாயினுங் காட்டீமோ காட்டாயேல் வானத் தெவன்செய்தி நீ | 30 | ஆரிரு ணீக்கும் விசும்பின் மதிபோல நீருள்ளுந் தோன்றுதி ஞாயிறே யவ்வழித் தேரை தினப்பட லோம்பு | 33 | நல்கா வொருவனை நாடியான் (3) கொள்வனைப் பல்கதிர் சாம்பிப் பகலொழியப் பட்டீமோ செல்கதிர் ஞாயிறே நீ |
எ - து: அங்ஙனங் கூறி, அவனோடே கலந்த கண் புருவம் தோள் நுசுப்புச் சிலமழைபோலே நீண்டிருண்ட கூந்தல் என்கின்றவற்றின் அழகைப் பெறும் விலையின் வளப்பத்தை அறிந்து கொடுத்தவனிடத்து உள்ளவற்றைக் கொள்ளுதல் அறியாதே ஒருவன் கூறிய (4) பொய்யாகிய வலையிலே என் நெஞ்சு அகப்பட்டுவிட்டது; என்றுகூறி, பின்னும் (5) கேளீர்! வாழ்வீராக; என
1. "கொலைவன் குடிய’’ (கலி. 103 : 15.) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 2. "அவனைத் திரைதரு முந்நீர் வளாஅக மெல்லா, நிரைகதிர் ஞாயிற்றை நாடென்றேன்’’ கலி. 146 : 27 - 29. 3. ‘உரைப்பனை’ என்பதற்கு, ‘உரைக்கும் அளவும்’ என்று பொருளும், ‘உரைப்பனை, திசைச்சொல்’ என்று விசேடக் குறிப்பும் எழுதி யிருப்பதை நோக்குக; கலி. 144 : 13. 4. ‘பொய்வலைப் படூஉம் பெண்டு’ ஐங்குறு. 283. 5. ‘இர்’ ஈறு ஈராய் விளியேற்கு மென்பது, தொல். விளி. சூ. 12. நச். உரையால் அறியலாகும்.
|