பக்கம் எண் :

956கலித்தொகை

8 கேளிர்க ணெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்க
(1) 1டாளிலான் குடியேபோற் றமியவே தேயுமாற்
2சூள்வாய்த்த மனத்தவன் வினைபொய்ப்பின் மற்றவன்
வாள்வாய்நன் றாயினுமஃ தெறியாது விடாதேகாண்

 எ - து: தான் சூளுறுகின்ற சூளுறவினைக் காண்கின்றவர் மனங்கொள் ளும்படி சூளுற்ற மனத்தையுடையவன் தான் சூளுற்ற காரியத்தினை முடிவு போக்காது பொய்த்துவிடுவனாயின், தன்னைச் சேர்ந்து வாழுஞ் (2) சுற்றத்தா ருடையநெஞ்சு தான் ஒன்றை அறியாமையால் வருந்தும்படி தன்னோடே கெழு முதலுற்ற செல்வத்திடத்தே தானின்று அச்செல்வத்தை மேலே மேலே வளர்க்கும் முயற்சிதானும் இல்லாதவனுடைய குடி நாடோறுந் தேயுமாறு போலத் தானே தானாகத் தேயாநிற்பன்; அதுவேயன்றிப் 3பின்னர் அச்சூளுற வினைப் பொய்த்த (3) தீவினை மறுமையில் விரவின் அது வாளின் வாய்கூரி தாய்ச் சுவர்க்கம் பெற்றானாயினும் நுகர்வியாமற் போகாதுகாண். எ - று.

இது வரைந்து கொள்வல் எனச் சூளுற்றதனைப் பொய்த்தாயென்றாள்.

ஆங்கு, அசை.

134அனைத்தினிப் பெரும வதனிலை நினைத்துக்காண்
சினைஇய வேந்த னெயிற்புறத் திறுத்த
வினைவரு பருவரல் போலத்
துணைவரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே. 

 எ - து: பெருமா! செய்ந்நன்றிக்கேடு பொய்ச்சூளுறவாகிய தீவினையின்ற ன்மை யாம்முற்கூறிய அத்தன்மைத்து: இனி நீதான் 5அத்தன்மைத்தாதலை 


1. (அ) "குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னு, மாசூர மாய்ந்து கெடும்’’ (ஆ) "மடியை மடியாவொழுகல் குடியைக், குடியாக வேண்டுபவர்’’ (இ) "மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த, குடிமடியுந் தன்னினு முந்து’’ 
(ஈ) "குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து, மாண்ட வுஞற்றி லவர்க்கு’’ குறள். 601, 602, 603, 604.

2. (அ) "சிறியவன் செல்வம்பேரற் சேர்ந்தாந்க்கு நிழலின்றி’’ (ஆ) "கிளையழிய வாழ்பவ னாக்கம்போற் புல்லென்று’’ (கலி. 10 : 2, 34 : 18) என்பவையும் அவற்றின் குறிப்புக்களும் இங்கே அறிதற்பாலன.

3. (அ) "எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை, வீயாது பின்சென்றடும்’’ குறள். 207. (ஆ) "ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉம்’’ சிலப். பதி. 57. (இ) "ஒளிப்பினு மூழ்வினை யூட்டாது கழியாது" இறை. சூ. 2. மேற்கோள். (ஈ) "உயிர்புகுஞ் சட்டக வுழி தொறு முழிதொறும், பழவினை புகுந்த பாடகம் போல’’ கல். 11 : 1 - 2.

(பிரதிபேதம்)1ஆளிலான், 2சூள்பொய்த்த மனத்தவன் வினைவாய்பின், 3பின்னச்சூளுற வினை, 4அனைத்துநீ, 5அத்தன்மைத்தினிதாதலை.