பக்கம் எண் :

முதலாவது பாலை113

இதன் பொருள்.

(1) செவ்விய (2) தீவிய சொல்லி யவற்றொடு
பைய முயங்கிய 1வஞ்ஞான் றவையெல்லாம்
பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய
வகனகர் கொள்ளா வலர்தலைத் தந்து.
பகன்முனி வெஞ்சுர முள்ள லறிந்தேன்
மகனல்லை மன்ற வினி

எ - று: ஐய! வஞ்சனை 2யிலவாய இனியவாகிய சொற்களைப் பையச் சொல்லி அச்சொற்களாலே தழுவின அக்களவொழுக்கம் நிகழ்ந்த நாளிற் கூறியவையெல்லாம் பொய்யாயிருத்தலை அறிவில்லாத யான் எங்ஙனம் அறிவேன்? அகன்ற மனையி லுள்ளாரால் அடக்க வொண்ணாத அலரை எம்மிடத்தே தந்து ஞாயிறு முனிந்த வெய்தாகிய காட்டைப் போக நினைத்தலை இப்பொழுது அறிந்தேன். நீ அறுதியாக நல்லமகனான தன்மையையுடையையல்ல; எ - று.

"சினனே பேதைமை நிம்பிரி நல்குர, 3வனைநால் வகையுஞ் சிறப்பொடு 4பெறுமே" (3) என்பதனாற் றன்காதலான் நின்னை உள்ளவாறு அறிந்திலேனெனத் தன் பேதைமையைக் காதலாற் சிறப்பித்தலின் அமைந்தது.

மற்றும் ஓவும் அசை.


1. (அ) "செவ்விய.............மற்றைய" என்பதனுள் 'யான் யாங்கறிகோ' என்பது பேதைமை பற்றியும் "அகனகர்............... மன்றவினி" என்பதனுள் தலைவி 'மகனல்லை' என்பது நிம்பிரியாகிய வெறுப்புப் பற்றியும் பிரிவாற்றாமையைச் சிறப்பிக்க வந்ததென்பர் இளம்பூரணர்; தொல். பொருளி. சூ. 49 'சினனே' (ஆ) தன்னாலும் தலைவியாலு மிடையீடு படுதலின்றித் தலைவனாற் கூட்டத்திற் கிடையூறு தோன்றிய வழித்தோழி கூறியதற்கும், (இ) தலைவி கூற்றுப் பேதைமை பற்றிவரினும் காதலைச் சிறப்பித்தலின் அமைந்த தென்பதற்கும் மேற்கோள்காட்டுவர், நச்சினார்க்கினியர்; தொல், கள, சூ, 23. பொருளி சூ. 51. (ஈ) "செவ்விய மதுரஞ் சேர்ந்தநற் பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல்" கம்ப. நகரப். 1.

2. (அ) "வடிப்புறு நரம்பிற் றீவிய மொழிந்தே" அகம். 142:29. (ஆ) 'தேம்படு கிளவியிற் றீவிய மிழற்றி"
(இ) "திருமாதேவி யொடுந் தீவிய மொழிந்து" (ஈ) "தீவிய மொழியொடு சேதிபற் குறுகி" பெருங் (1) 41;87 (4) 8:96; (4) 12:152.

3. தொல். பொருளி சூ 51.

(பிரதிபேதம்) 1 அந்நான்று, 2 இலவாய், 3 எனநால், 4 வருமே.