எ - து: நும்முடன் இவட்குப் பிணிப்புமிகும்படி நல்வினை 1நிகழ்கின்ற காலத்தே நும்மை நுகராமையாகிய தீவினை வந்து புகுந்த இடத்துத், தகடாகிய பொன்னினது விளக்கத்தையொக்கும் அழகிய சுணங்கு கெடும்படி ஞாயிறுகாய்ந்த சுரத்தைப் போகும் நும்மை யாங்கள் எம்மிடத்து வருத்தத்தைச் சொல்லி விலக்க எம்மிடத்து ஒரு நல்வினை நின்றதும் உண்டோ ?இல்லையே, யாங் கூறுவதென் ? எ - று. ஓகாரம் எதிர்மறை. "காமஞ் சான்ற கடைக்கோட காலை, யேமஞ் சான்ற மக்களொடு துவன்றி, யறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ், சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே" என்னும் (1) சூத்திரத்திற் றலைவனும் தலைவியும் (2) மூப்பு வருவதன்முன் துறப்பாரென்றலின், பல்லு விழும்பருவத்தும் (3) நரைவரும் பருவத்தும் இல்லறஞ் செய்திருப்பாரென்றல் பொருந்தாமை யுணர்க. இது சுரிதகம். இதனால், தோழிக்கு இழிவும் தலைவற்கு அசைவும் பிறந்தன. இஃது எட்டடித்தரவும் மூன்றடித்தாழிசையும் தனிச்சொல்லும் வெள்ளைச் சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலிப்பா. " வெண்பா வியலினும் பண்புற முடியும்" (4) என்பதுவிதி, இது மேல்வருவன வற்றிற்குங் கொள்க. (21) 23 | (5)இலங்கொளி மருப்பிற் கைம்மா வுளம்புநர் புலங்கடி கவணையிற் பூஞ்சினை யுதிர்க்கும் விலங்குமலை வெம்பிய போக்கரு வெஞ்சுரந் தனியே யிறப்ப யானொழிந் திருத்த னகுதக் கன்றிவ் வழுங்க லூர்க்கே |
1. தொல். கற்பியல், சூ, 51. 2. (அ) "இறந்திலன் செருக்களத்திராமன் றாதைதா, னறந்தலை நிரம்ப மூப்படைந்த பின்னருந், துறந்தில னென்பதோர் சொல்லுண் டானபின், பிறந்தில னென்பதிற் பிறிதுண் டாகுமோ" கம்ப. அயோத்தி மந்திர 28. (ஆ) "வெண்மதி நுதலாய் காமம் வெறுக்குநாள் காறு நின்கேள், வண்மலராகந் தோய்ந்து வாழ்தி" பிரமோத்தர உமாமகேசுவரா பூசாபலம் 6. 3. "நரைவரு மென்றெண்ணி நல்லறி வாளர், குழவியிடத்தே துறந்தார் புரைதீரா, மன்னா விளமை மகிழ்ந்தாரே கோலூன்றி, யின்னாங் கெழுந்திருப்பார்" நாலடி. 11. 4. தொல்.செய். சூ. 77. 5. இரண்டடியாற் றாழிசை வந்ததற்கு இச்செய்யுள் மேற்கோள். தொல். செய். சூ. 131. ‘போக்கியல்’ இளம். (பிரதிபேதம்) 1 நெகிழ்கின்ற, நல்குகின்ற. `
|