பக்கம் எண் :

முதலாவது பாலை131

12 கூடினர் புரிந்து (1) குணனுணப் பட்டோர்
சூடின ரிட்ட பூவோ ரன்னர்

எ - து; மனம் விரும்பிக் கூடின கணவராற் றங் குணத்தை நுகர்ந்து விடப்பட்ட மகளிர், முடிப்பார் முடித்துப்போகட்ட பூவை ஒப்பர், அந்நிலையை ஓர்ந்துபார்; எ - று.

இவை " உண்டற் குரிய வல்லாப் 1பொருளை" என்னும் (2) சூத்திரத்தில் உய்த்துக்கொண் டுணர்தலென்பதனாற் கொண்டாம்.

இவை மூன்றும், தாழிசை.

எனவாங்கு, அசை.

இது தனிச் சொல்.

15 யானு நின்னகத் தனையே னானாது
கொலைவெங் கொள்கையொடு 2 நாயகப் படுப்ப
3 வலைவர்க் கமர்ந்த மடமான் போல
(3) நின்னாங்கு வரூஉமென் னெஞ்சினை
யென்னாங்கு வாரா தோம்பினை கொண்மே

எ - து; நின்னிடத்து யானும் பயன்படாததன்மையையுடையேன், இனிக் கொலைத் தொழிலிடத்துக் கடிய கோட்பாட்டோடே நாய் அமையாமற் சென்று தனக்கு உரித்தென்று 4அகப்படுத்திக்கொள்ள அதற்கு உரித்தாகாது வலைவர்க்கு அமர்ந்துவிட்ட மடமான்போலே எனக்கு உரித்தாக யான் அகப்படுப்பவும் என்னாங்கு வாராமல் நின்னாங்குவரும் என் நெஞ்சினைப் பாதுகாத்துக் 5 கொள்; எ-று.

இது சுரிதகம்.

இதனால், தலைவிக்கு இழிவும் தலைவற்கு அசைவும் பிறந்தன.

நின்னாங்கு என்னாங்கு என்பன நின்னுடைய கையிடத்து என்னுடைய கையிடத்து எனச் சுட்டுப் பொருள் (?) தந்தவாறுணர்க.

இஃது இனியான் எனத் தனிச்சொல்லும் ஓரடியான் ஒன்றும் பெற்று வந்த கொச்சகம்; இது " பாநிலைவகை" என்னும் (4) சூத்திரவிதி (22)


1. ஓசையாற் சன மொண்ணிதி யுண்டதே யென்னுமிடத்து உண்டதென்பதற்குக் கைக்கொண்டதென்று பொருள் கூறி "உண்டற் குரியவல்லா ப்பொருளை, யுண்டனபோலக்கூறலுமரபே" என்றதனால் உண்டதென்றார்; 'குணனுணப் பட்டோர்' என்றார்போல" என இப்பகுதியை இவ்வுரை யாசிரியர் மேற்கோள் காட்டினர். சீவக. 911.

2, தொல். பொருளி. சூ. 19. இந்நூற் பக்கம் 130 : 1 - குறிப்புப் பார்க்க.

3. (அ) காவற்பாங்கி னாங்கோர் பக்கமு மென்புழி, காவற் பாங்கினாங்கென்பதற்கு, காவற் பக்கத்தின் கண்ணே யெனப்பொருளும் ஆங்கென்பது இடங்குறித்து நின்றதென விளக்கமு மெழுதி 'நின்னாங்கு வரூஉமென் னெஞ்சினை' என்னும் பகுதியை மேற்கோள் காட்டினர். இளம். தொல். அகத். சூ. 44' ஒன்றாத்தமரினும்'. (ஆ) " நின்னாங்கு வருவது போலும்" மணி. 11. 47.

4. தொல். செய். சூ. 156.

(பிரதிபேதம்) 1 பொருளையும்" என்னும், 2 நாயகடுபடுப்ப, 3 வலைவற்கமர்ந்த, 4 அகடுபற்றிக்கொள்ள,
5 கொள்ளென இறந்துபாடு தோன்றக்கூறினாள்.